பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலி விரைவில் குறைந்தது, விழி திறக்கவில்லை. திறப்பதற்கான வாய்ப்பும் இல்லை , ஊழின் வலிமையை யாரால் தடுத்து நிறுத்த முடியும்? மனித நினைவுகளையும் நம்பிக்கைகளையும் நிமிட நேரத்தில் பாழாக்கும். ஊழ் என்ற விதியின் பேரிழப்பினைத் தடுக்கும் பேராற்றலை மனிதன் இதுவரை பெறவில்லை தினகரரது இரு கண்களும் பாதிக்கப்படவேண்டியவை என்பது விதியின் நியதி. அதனைச் செய்து முடிப்பதற்கு ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து மருத்துவர் ஒருவர் வரவேண்டியதாக இருந்தது மருத்துவர் வந்தார். விதியின் விளையாட்டை முடித்துச் சென்றார்.

கொடுமையிலும் கொடுமை வீடு வெந்த பிறகு யாருக்கு என்ன ப யன் தினகர் மெளனமானார். திகைப்பினால் என்ன செய்வது என்ன செய்வது என்று புலம்பித் தவித்தார். சில நிமிடங்களில் மனத் தேறுதலைப் பெற்றார். விதி விளையாடி விட்டதை உணர்ந்தார்.

தமது உதவியாளரை அழைத்து டாக்டரை டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்று “லஞ்ச் לל அளிக்கும்படி பணித்தார்.

டாக்டர் உணவிற்கு செல்ல மறுத்து விட்டதுடன், அன்று மாலையிலேயே சென்னை திரும்புவதாகச் சொல்லி தினகரரிடம் விடைபெற்றார். அவர் இராமநாதபுரத்தில் தங்குவதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. இராமமந்திரத்திலிருந்து மருத்துவரை ஏற்றிக்கொண்டு தினகரது கார் இராமநாதபுரம் ரயில்வே

நிலையம் புறப்பட்டது.

82