பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீண்ட நேரம் மெளனமாக அமர்ந்திருந்த தினகர், மாளிகையின் முகப்பிற்குச் செல்ல எழுந்தவுடன் அவரது உதவியாளர் அவரைப் பற்றி மாளிகை முகப்பில் வரிசை வரிசையாக வைக்கப்படிருந்த பூந்தொட்டிகளுக்கு அருகில் சாய்வு நாற்காலியைப் போட்டு அதில் அமருவதற்கு

உதவினார்.

மன்னவர் கன்னியராய் மங்கையராய், மைந்தர் நடந்து வருவது போன்ற மென்மையான தென்றல் காற்றின் சில சிலுப்பில் தினரது மெளனம் கலைந்தது. இறைவனது நாமத்தை உச்சரித்து, அவருக்கு ஏற்பட்ட அவலத்திற்கு தீர்வு காண்பதற்கு முயன்றார் . -

நொந்து போன மனத்திற்கு ஆறுதல் அளிக்கவல்ல அரியமாற்று இறைவனது நாமம் தானே !

83