பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்மாவின் எதிரொலி போல رنئي را ردD/ Gى இசைக்கப்படும் பியானோ வாத்தியம் துரக படிந்து

காணப்பட்டது.

நூலக அறையும் ஒரு மாதத்திற்கு மேலாக மூடிக்கிடந்தது. நூல்களைப் படித்துச் சுவைப்பதற்க்கு கண்ணொளி இல்லையே ! அவருக்கு !

அவரது வளர்ப்பு நாய், குதிரை, மயில், அனைத்தும் அந்தச் புதிய மெளன சூழ்நிலையின் சாட்சிகளாக

இருந்தன.

எங்கும் விரைவு, விறுவிறுப்பு, ஒழுங்கான செயல்பாடுகள், களிப்பு, சிரிப்பு, எதுவும் இல்லாத கனவு உலகம் போல அந்த மாளிகை வளாகம் முடிவில்லாத

அமைதியாகக் காணப்பட்டது.

இப்பொழுதெல்லாம் தினகரது அன்றாட அலுவல்களில் பெரும் மாற்றமிருந்தது. முன்பு போல வைகறைப் பொழுதில் பூஜை அறையில் அமர்ந்து தேவார திருவாசகத்தை நீண்ட நேரம் பாராயணம் செய்தது. பூஜை மேடையில் வைக்கப்பட்டுள்ள சிவபெருமான் படம் வானில் இருந்து இறங்கும் கங்கையைத் தாங்குவதற்காக புலித்தோல்போர்த்திய இடையில் இருகைகளையும் வைத்துக்கொண்டு விரித்த சடை முடியுடன் ஆகாயத்தை நோக்கியவாறு நிற்கும் சிவபெருமானது படத்திற்கும் இராமபிரான் சீதையுடன் அமர்ந்து இலக்குவன் அனுமன், வீடணன், அங்கதன் வசிட்டர் ஆகியோருடன் காட்சியளிக்கும் பட்டாபிசேக இராமர் படத்திற்கு அவரது

8.5