பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோட்டத்து மலர்களில் தொடுத்த கதம்ப மாலையை சார்த்துதல். பூஜையில் கலந்த மாளிகைப் பணியாளர்களுக்கு தனது கையாலேயே நைவேத்திய பிரசாதங்களை வழங்குவது போன்றவைகளை அவர் இப்பொழுது செய்வதில்லை. இவைகளைச் செய்வதற்காக சிவப்பிராம்மணர் ஒருவர் நியமனம் செய்யப்படுதல் என்றாலும் 'நமச்சிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க לר என்ற மணிவாசகரது சிவபராயனத்தைச் சொல்லி முடித்தவுடன்

அவரது காலை பூஜை முடிந்துவிடும்.

பணியாளரது உதவியுடன் மாளிகை முகப்பிற்கு வந்து சோபாவில் அமர்ந்ததும் காபிக் கோப்பையைக் கொண்டு வந்து கொடுப்பார்கள் . அதனைப் பருகியவாறு

வானொலி கேட்பார் .

காலைநேரம் சென்று விடும். காலைச் சிற்றுண்டி முடித்துவிட்டு மீண்டும் முகப்பிற்கு வந்து அமர்ந்துவிடுவார். நடுப்பகல்வரை மெளனம் .

இடையில் யாராவது வந்து உதவி கோரினால் அனுதாயத்துடன் அவர்களுக்கு வேண்டிய பொருள் கொடுத்து அனுப்பிவைப்பார் அல்லது அவர்கள் விரும்பும் யாராவது பெரிய மனிதருக்கு பரிந்துரைக் கடிதம் அளித்து அனுப்பிவைப் பார். சில ஏழை எளியவர்களது வந்து தினகரை சேவித்து நிற்பர்.

அவர்களைச் சமையல் கட்டிற்கு அழைத்துக் கொண்டு வயிறாற சாப்பிடுமாறு செய்து சேலையும் வேட்டியும் கொடுத்து வழிச்செலவிற்குச் சிறிது பணமும்

86