பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திவான் லொடபட சிங் பகதூர்

முதலில் பேசிய முக்கியஸ்தன், சரி; நாங்கள் பிணத்தை இங்கே வைக்கவில்லை. இந்த ஊர் மகாராஜன் பிச்சைக்காரப் பிணத்தின் வாயிலிருக்கும் அரிசியைக் கூடத் தோண்டி எடுக் கிறவன் என்பது எங்களுக்குத் தெரியாது. அது தெரிந்திருந்தால், வரும்போது ஒரு பணம் கொண்டுவந்து உங்கள் இழவுக்கு அழுதிருப்போம். இருக்கட்டும். நாங்கள் பிணத்தை எடுத்துக் கொண்டு, இருளான பிறகு ஊருக்குள் போய், மகாராஜனுடைய அரண்மனை வாசலில் போட்டுவிட்டுப் போகிறோம். மனிதன் பிறப்பது முதல், தண்ணிர் குடிப்பது, சாதம் சப்பிடுவது, துணி கட்டுவது, உழைத்து ஜீவனம் செய்வது, கடைசியில் செத்து இந்த நகரத்தை விட்டு எமனுலகத்துக்கும் போவது முதலிய எல்லாவற் றிற்கும் வரி வாங்குகிறவனான அரசனுக்குத்தான் இந்த அநாதைப் பிணமும் சொந்தம். ஆகையால் இதை மகாராஜன் எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஊருக்குள் இந்த அசுத்தம் இருக்கக்கூடாதுஎன்று நினைத்து நாங்கள் எங்கள் வேலையை எல்லாம் விட்டு மெனக்கட்டு இவ்வளவு தூரம் பிரயாசைப்பட்டு வந்ததற்கு இந்த ஊர் மகாராஜன் எங்களுக்குத்தான் ஏதாவது பணம் கொடுக்கவேண்டும். அதை விட்டு நாங்கள் இதற்கு வரிப்பணம் கொடுப்பது என்றால், அந்த நியாயம் எந்த உலகத்திலும் இல்லாத அதிசய நியாயமாகத்தான் இருக்கிறது. ஆகையால், நாங்கள் உங்களுடைய உத்தரவுப்படியே பிணத்தைத் திருப்பி எடுத்துக் கொண்டு போகிறோம். நீங்கள் கவலைப்படவேண்டாம். ஐயா மார்களே!” என்று கூற, மற்ற எல்லோரும் அதைக் கேட்டவுடனே, வந்த வழியாக பிணப்பாடையைத் திருப்பினர். சேவகர்கள் திருப்தி அடைந்து, "சரி; நீங்கள் எப்படியானாலும் செய்து கொள்ளுங்கள். நாங்கள் அதிகாரத்தைச் செலுத்தியே தீர வேண்டும். நீங்கள் பிணத்தை அரண்மனை வாசலில் கொண்டுபோய்ப் போடுங்கள். வரிப்பணத்திற்குப் பதிலாக இந்தப் பிணத்தை மகாராஜன் தம்முடைய பொக்கிஷ சாலையில் அடமானமாக வைத்துக் கொள்ளட்டும்” என்று கூறிவிட்டுத் தங்கள் சாவடியை அடைந்தனர்.

அந்த ஊர் மகாராஜன் சகிக்க வொண்ணாத வியப்போடும் திகைப்போடும் அங்கு நடந்த விஷயங்களைக் கடைசி வரையில் கவனித்திருந்தும், பிணம் திருப்பிவிடப்பட்டதைக் கண்டு,

52