உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1

இத்தலத்தைப் பற்றிய நூல்கள்

(1) தேவாரம் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய பதிகம் ஒன்று; இது பதினொரு பாடல்களையுடையது. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருத்தாண்டகப்பதிகம் ஒன்று; இது பத்துப் பாடல்களைக் கொண்டது . சுந்தரமூர்த்திகள் அருளிய பதிகம் ஒன்று; இது பதினொரு பாடல்களை உடையது.

(2) மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்தில் கீர்த்தித் திருவகவலில் "புறம்பயமதனில் அறம் பல வருளியும்" என்று கூறியுள்ளனர்.

66

(3) பட்டினத்தடிகள் திருவேகம் பமுடையார் திருவந்தாதியில்,

நினைவார்க்கருளும் திருச்சோற்றுத் துறைநியமம்

புனைவார் சடையோன் புகலூர் புறம்பயம் பூவணநீர்

புனைவார் பொழில் திருவெண்காடு பாச்சில் அதிகையென்று நினைவார் தருநெஞ்சினீர் கச்சி ஏகம்பம் நண்ணுமினே”

என்ற பாடலில் புறம்பயத்தைக் குறித்திருக்கின்றனர்.

4. பெரிய புராணம்;

திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் புராணத்தில் அப் பெருமான் புறம்பயத்திற்கு எழுந்தருளி இறைவனை வணங்கித் திருப்பதிகம் பாடிய வரலாற்றைக் சேக்கிழாரடிகள் கூறுமிடத்து,

66

66

விசயமங்கையினிடம் அகன்று மெய்யர்தாள்

அசைவில் வைகாவினில் அணைந்து பாடிப்போந்

திசைவளர் ஞானசம் பந்தர் எய்தினார்

திசையுடை ஆடையர் திருப் புறம்பயம்."

‘புறம்பயத் திறைவரைவணங்கிப்போற்றிசெய்

திறம்புரி நீர்மையிற் பதிகச் செந்தமிழ்

நிறம்பயில் இசையுடன் பாடி நீடிய

அறந்தரு கொள்கையார் அமர்ந்து மேவினார்."

என்றுரைத்துள்ளனர்.

(240)

(241)

ஏயர் கோன் கலிக்காம நாயனார் புராணத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகள் புறம்பயத்திற்கு எழுந்தருளிய வரலாற்றை உரைக்குங் கால்,