உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருப்புறம்பயத் தல வரலாறு

66

66

66

“ ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்தர இறைவர் கழல்வணங்கி ஆரும் அன்பிற் பணிந்தேத்தி ஆரா அருளால் அங்கமர்வார் போரின் மலியுங் கரியுரித்தார்மருவும் புறம்பயம் போற்றச்

66

சேரும்உள்ளம் மிக்கெழமெய்ப் பதிகம் பாடிச் செல்கின்றார்” (95)

அங்கம் ஓதியார் ஆறைமேற்றளி என்றெடுத் தமர்காதலில் பொங்கு செந்தமிழால் விரும்பு புறம்பயந் தொழப்போதுமென்” றெங்கும் மன்னிய இன்னிசைப் பதிகம் புனைந்துமே எய்தினார் திங்கள் சூடியி செல்வர் மேவு திருப்புறம் பயஞ்சேரவே”

(96)

அப்பதிக்கண் அமர்ந்ததொண்டரும் அன்றுவெண்ணைநல்லூரினில் ஒப்பருந்தனி வேதியன் பழ ஓலைகாட்டிநின் றாண்டவர் இப்பதிக்கண் வந்தெய்த என்னதவங்கள் என்றெதிர் கொள்ளவே முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார்" (97) நீடுகோபுர முன்பிறைஞ்சி நிலாவு தொண்ட ரொடுள்ளளைந் தாடல் மேவிய அண்ணாலாரடி போற்றி அஞ்சலிகோலிநின் றேடுலாமலர் எட்டி னோடைந்து மாகும் என்னும் உறுப்பினால் பீடு நீடு நிலத்தின்மேற் பெருகப் பணிந்து வணங்கினார்” என்று சிறப்பித்துக்கூறியுள்ளனர்.

5. பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணம்;

(98)

99

இதில் அறுபத்து நான்காவது படலத்தில் சொல்லப் பட்டுள்ள வன்னியுங் கிணறும், இலிங்கமும் அழைத்த வரலாறு திருப்புறம் பயத் தலபுராணத்தில் செட்டிப் பெண் சருக்கத்தில் காணப்படு கின்றது. ஆனால் சரித நிகழ்ச்சியில் இருபுராணங் களும் சில இடங்களில் வேறுபடுகின்றன. இவ்விரண்டு புராணங் களையும் ஆராய்ந்து யான் கண்ட முடிபுகளை மதுரைத் தமிழ் சங்கத்துச் “செந்தமிழ்ப் பத்திரிகை” 12-ஆம் தொகுதி 7- ஆம்பகுதியில் 1914- ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளேன். 6.வேம்பற்றூர் நம்பி திருவிளையாடற் புராணம்;

இதில் சான்றழைத்த திருவிளையாடல் என்ற பகுதியில் திருப்புறம்பயம் புராணத்தில் காணப்படும் செட்டிப் பெண் வரலாறு கூறப்பட்டிருக்கிறது.

7. சிவஞான முனிவர் பாடிய "சோமேசர் முதுமொழி வெண்பாவிலும் சென்ன மல்லையர் "சிவசிவ" வெண்பாவிலும்