உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

66

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

'இத்தலத்தில் நடந்ததாகத் தல புராணத்தில் சொல்லப் பட்டுள்ள ஒரு நிகழ்ச்சி உதாரணமாக எடுத்துக் காட்டப்

பெற்றிருக்கிறது. அப்பாடல்களை அடியிற்காணலாம்

66

66

குற்றொருவர் கூறைகொண்டு கொன்றதிம்மை யேகூடல்

சொற்றதுகை கண்டோமே சோமேசா - அற்றான் மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழும் சூழ்ந்தவன்கேடு" (சோ மு .வெ தீவினையச்சம்)

புறம்பயத்து மின்னையுயிர் போக்கவந்தான் பட்ட

திறந்தெரி யாதோ சிவ சிவா = அறந்தார்

பிறர்க்கின்னா முற்பகல் செய்யில் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்”

8.தல புராணம்

இத்தலத்திற்கு வடமொழியில் ஒரு புராணமும், தமிழ் மொழியில் ஒரு புராணமும் இருக்கின்றன, இரண்டும் அச்சிடப் பெறவில்லை. தமிழ்ப் புராணத்தில் இறுதியிலிருந்த இரண்டு சருக்கங்கள் காணப்படவில்லை. அவை இறந்தன போலும். இதில் 396 செய்யுட்கள் இருக்கின்றன. நூலாசிரியர் யாவர் என்பது புலப்படவில்லை. திருப்புறம்பயத்தில், அந்நாளிலிருந்த சாமிநாதபிள்ளை, சங்கரமூர்த்திபிள்ளை, வைத்தியநாத பிள்ளை என்போர் கேட்டுக்கொண்டவாறு தல புராணத்தைத் தமிழ் மொழியில் தாம் பாடியதாக நூலாசிரியர் கூறியிருக்கிறார். இது சுமார் 160 ஆண்டு கட்கு முன்னர் எழுதப் பெற்ற புராணமாக இருக்கலாம். இப்புராணம் பதின்மூன்று சருக்கங்களை உடையது. 9. திருப்புறம்பயம் உலா :

புராணம் பாடிய ஆசிரியரே இவ்வுலாவையும் பாடியிருக் கிறார் என்பது இந்நூலிலுள்ள சில குறிப்புக்களால் தெரிகிறது. இவ்வுலா முழுவதும் இந்நாளில் கிடைக்கவில்லை. சிதைந்து கிடந்த ஒரே ஏட்டுப் பிரதியிலிரிந்து பேதைப் பருவம் வரையில் எழுத முடிந்தது; எஞ்சிய பகுதி அழிந்து விட்டது. இஃது இனிய நடையில் அமைந்ததோர் நூலாகும். இதில் தல வரலாறு சுருக்க மாகச் சொல்லப்பட்டிருக்கிறது.