உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருப்புறம்பயத் தல வரலாறு

10. புறம்பயமாலை.

101

இது புறம் பயத் திறைவன் மீது பாடப்பட்ட 32 செய்யுட் களையுடய ஒரு நூல்; அச்சிடப்படவில்லை.

11. கரும்புமை மாலை;

இது அம்பிகை மீது படப்பட்ட 32 செய்யுட்களை யுடைய ஒரு நூல்; அச்சிடப்படவில்லை

99

இவ்விரண்டு மாலைகளையும் இயற்றியவர் பெயர் தெரியவில்லை. "சாட்சிநாதர் வெண்பா" என்ற நூல் ஒன்றிருந்த தாகக் சொல்லுகின்றனர், அஃது இக்காலத்தில் காணப்பட வில்லை.

12. கி.பி.14ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களும் கலம்பகத்திற்கு இரட்டையர்களென்று அறிஞர்களால் பாராட்டப்பட்டவர் களாகிய இரட்டைப் புலவர்கள் தாம் பாடிய தில்லைக் கலம்பகத்தில்,

66

நன்றென மகிழ்ந்தொரு சிதம்பர நடம்புரியு நம்பர்பானார் குன்றென உயர்ந்தவர் விரும்பிய பெரும்பதி குடந்தை கடவூர் தென்குடி வலஞ்சுழி புறம்பயம் எறும்பிமலை செம்பியனலூர் அன்பில் புறவம் பழனம் வஞ்சிகளம் இஞ்சிகுடியம்பர் நகரே”

என்ற பாடலில் புறம்பயத்தைக் கூறியுள்ளனர்.

13. அருணகிரிநாதர் தம் திருப்புகழில் திருந்செந்தூர் பாடலில் "புறம்பயம் அமர்வோனே என்று புறம்பயத் தெழுந் தருளியுள்ள முருகக் கடவுளை குறித்துள்ளனர்.”

14. தலபுராணச்சுருக்கம்

1. பிரளயங்காத்த சருக்கம்;

இராகு அந்தரத்தில் நிகழ்ந்த ஒரு பிரளயம் சிவபெருமான் ஆணையின்படி விநாயகரால் அடக்கப்பெற்றமையும், அப்போது வருணன் கடல்படுபொருள்கள் கொண்டு அவ்விநாயகரை வழிபட்டமையும், அதுபற்றி அவர் பிரளயங்காத்த விநாயகர் என்று பெயர் எய்தியமையும் இச்சருக்கத்தில் சோல்லப் பட்டிருக்கின்றன.