உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1

2. அரித்துவசச் சருக்கம்;

மகத நாட்டு மன்னன் அரித்துவசன் என்பான் துருவாச முனிவர் சாபத்தினால், முயலகநோயுற்றுப் பெருந்துன்பம் எய்தி இறுதியில் புறம்பயத் திரைவன்பால் வந்து வழிபட்டு அந்நோயைப் போக்கி கொண்ட வரலாறு அதில் கூறப்பட்டிருக் கிறது.

3. தீர்த்தச் சருக்கம் :

இதில் பிரம தீர்த்தம், சத்தசாகர கூபம், சந்திர புட்கரணி, சூரிய புட்கரணி என்பவற்றின் சிறப்புரைக்கப்பட்டிருக்கிறது. 4. தட்சிணாமூர்த்தி சருக்கம்.

புறம்பயத் தெம்பெருமான் பிரம தீர்த்தத்தில் தென்கரையில் ஆலின் கீழ் எழுந்தருளிச் சனக முதலான முனிவர் நால்வர்க்கும், அக்கினிதபசு என்ற முனிவர்க்கும் மெய்ப்பொருள் உணர்த்திய வரலாறு இதில் விளக்கப்பட்டுள்ளது.

5. திருவிழாச் சருக்கம் :

மாசித் திங்களில் நடைபெறும் மக விழாச் சிறப்பும் தேர்ச் சிறப்பும் இதில் காணலாம்.

6. செட்டிப்பெண் சருக்கம் :

காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து மதுரைக்குச் சென்ற வணிகன் ஒருவன் அரவினால் உயிர் துறக்க அவனோடு வந்த வணிக மங்கையின் வேண்டு கோட்கிரங்கிப் புயம்பயத்தெம் பெருமான் அவனுக்குயிரளித்ததோடு அவ்விருவருக்கும் மணம் புரிவித்தமையும், பின்னர் மதுரையில் அம்மாதை இழித்துப் பழித்துரையாடிய அவள் சக்களத்தியாகிய மூத்தாள் உண்மையை உணர்ந்து கொள்ளுமாறு வன்னி, கிணறு, மடைப்பள்ளியோடு அப்பெருமான் சான்று கூறினமையும், அது பற்றி அவர் சாட்சி நாதர் என்ற பெயர் அடைந்தமையும் இதில் கூறப்பட்டிருக்கின்றன. 7. கலைபிங்கன் சருக்கம் :

இது நாள் தோறும் திருக்கோயிலுக்கு விறகு கொணர்ந்த கோவந்தபுத்தூர் புலைஞர் குல அன்பர் ஒருவர்க்கு இறைவன் வீடுபேறு அருளியதை உணர்த்துகின்றது.