உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருப்புறம்பயத் தல வரலாறு

8. வசந்த கலிகைச் சருக்கம் :

103

ஆதனூரிலிருந்த தன் காதலன் பால் சென்ற கோயிற் பணிமகள் ஒருத்தியின் அணிகலன்களைக் கவர்ந்து கொண்டு அவளைக் கொன்று மண்ணியாற்றில் தள்ளிய கொடியோனும், தவறி அவ்வாற்றில் வீழ்ந்து இறக்கவே அவ்விருவருக்கும் இறைவன் நற்கதி அருளிய வரலாற்றை இதில் காணலாம்.

9. விந்தாசலச் சருக்கம் :

விந்தாசல வேந்தன் அகத்தியர் பாற் பெற்ற சாபத்தைப் புறம்பயத் திறைவனை வழிபட்டு தீர்த்துக் கொண்டமை இதில் சொல்லப்பட்டுள்ளது.

10. அசுவத் தாமச் சருக்கம்:

துரோணர், தம் தீர்த்த யாத்திரையில் புறம்பயத் தெம் பிரானைப் பூசித்து அசுவத்தாமா என்ற புதல்வனை அடைந்தமை இதில் உரைக்கப் பெற்றுள்ளது.

11. இமயமால் வரைச் சருக்கம் :

மகப்பேரின்றி வருந்திய இமயபருவதராசன் அகத்திய முனிவர் கூறியவாறு புறம்பயத் திறைவனுக்கு வழிபாடாற்றிப் பார்வதி தேவியைப் புதல்வியாகப் பெற்ற வரலாற்றை இது கூறுகின்றது.

12. விசுவாமித்திரச் சருக்கம் :

வசிட்டரோடு மாறுபட்ட விசுவாமித்திரர் பிரம இருஷி யாதற்குப் பல நாட்கள் தவம்புரிந்தும் அப்பேற்றைப் பெறாது இறுதியில் புறம்பயமமர்ந்த பெருமானை வழிபட்டு அச்சிறப்பை யடைந்த சரிதம் இதில் உள்ளது.

13. சுக்ரீவச் சருக்கம் :

வாலியால் துன்புறுத்தப் பெற்ற சுக்ரீவன் மதங்கமுனிவர் ஏவலால் புறம்பயத்தை யடைந்து தவம்புரிந்து, இறைவன் திருவருள் துணைகொண்டு தன் பகைவனாகிய வாலியை வென்று கிட்கிந்தையை ஆட்சி புரியும் பேற்றை அடைந்தமை இதில் சொல்லப்பட்டிருக்கிறது.