உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1

கல்வெட்டுச் செய்திகள் :

இத்திருக் கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று விஜயநகர வேந்தன் காலத்தியது. மற்றவை எல்லாம் சோழ மன்னர் காலத்தியன ஆகும். அரசாங்கக் கல்வெட்டுத் துறையினர் கி.பி. 1897ஆம் ஆண்டில் 12 கல்வெட்டு களும் 1927-ஆம் ஆண்டில் 35 கல்வெட்டுகளும் 1931-ஆம் ஆண்டில் 16 கல்வெட்டுகளும் படி எடுத்துப் போயிருக்கின்றனர். அவற்றைப் பற்றிய சுருக்கமான செய்திகள், தென்னிந்தியக் கல்வெட்டுத் துறையினரின் 1927, 1932 ஆம் 1932 ஆம் ஆண்டு அறிக்கைகளில் வெளிவந்துள்ளன. (Inscriptions 323 to 357 of 1927 and 146 to 162 of 1932) பல கல்வெட்டுக்களை தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் ஆறாம் தொகுதி. பதின்மூன்றாம் தொகுதிகளில் காணலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் திங்கள் வெளியீடான தமிழ்ப் பொழிலில் 12 கல்வெட்டுகள் நான் வெளியிட்டிருக் கிறேன். எல்லாக் கல்வெட்டுகளும் அருமையான வரலாற்றுண்மை களை அறிவிக்கும் தகுதியுடையனவாய் இருக்கின்றன. அவை நம் தமிழகத்தில் பண்டைக் காலத்தில் சிறப்புடன் ஆட்சிபுரிந்த செங்கோல் வேந்தர்களான சோழர்களது வரலாறு, ஆட்சி முறை ஆகியவற்றை அறிதற்குப் பெரிதும் பயன்படும் என்பது திண்ணம், அன்றியும், திருக்கோயில், ஊர், இவற்றைப் பற்றிய பழைய செய்திகளையும் அவற்றால் அறியலாம்.

இப்போதுள்ள கருங்கற் கோயில் கி.பி. 870 முதல் 907 வரையில் தஞ்சையிலிருந்து ஆட்சி புரிந்த முதலாம் ஆதித்த சோழனால் கட்டப் பெற்றது என்று தெரிகிற. கி.பி. 880-ல் திருப்புறம்பயத்தில் நிகழ்ந்த போரில் வெற்றிபெற்ற ஆதித்த சோழன், புறம்பயத் திறைவன்பால் ஈடுபட்டுச் செங்கற் கோயிலாகவிருந்த இதனைக் கருங்கற் கோயிலாக அமைத்து, இதற்கு ஆதித்தேசுவரம் என்ற பெயரும் வழங்கியுள்ளனன். இக்கோயிற்கு ஆதித்தேசு வரம் என்றபெயர் உளது என்பது அதிலுள்ள இரண்டு கல்வெட்டுகளால் புலப்படுகின்றன. ஆதித்தன் புதல்வனாகிய முதற் பராந்தக சோழன் (கி.பி. 907- கி.பி.953) ஆட்சியின் 16-ஆம் ஆண்டு கல்வெட்டு, அவன் பாண்டி நாட்டையும், ஈழ நாட்டையும், வென்ற செய்தியை