உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




156

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1

நறுமலர்களைப் பறித்துவந்து இறைவனை அருச்சித்துப் போற்றினர் என்பது புராண வரலாறு. இச்செய்தியினைக் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த திருஞானசம்பந்தப் பிள்ளையார்

66

எனவும்,

66

" கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடம் தள்ளாய சம்பாதி சடா என்பார் தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே”

யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே”

எனவும் வரும் திருப்பாடல்களிற் குறித்துப் போற்றி யுள்ளார்கள். நான்கு குரோசம் கொண்ட தூரம் ஒரு யோசனை என்றும், ஒரு குரோசம் என்பது இரண்டேகால் மைல் என்றும் கூறுவர். எனவே, சுமார் ஒன்பது மைல் தூரம் ஒரு யோசனை யெனக் கொள்ளலாம். இக்கணக்கினைக்கொண்டு சிந்தித்தால் சம்பாதி என்ற பெரியார் புள்ளிருக்கு வேளூர்ப் பெருமானைப் பூசித்தற் பொருட்டு நாள்தோறும் நறுமலர் பறித்துவந்த நந்தவனம் இப்புகார் நகர எல்லையை அடுத்திருந்ததென்பது நன்கு விளங்கும். அது இப்பொழுது பெருந்தோட்டம் என வழங்கும் ஊரினைக் குறிக்கலாம். திருஞானசம்பந்தப் பிள்ளையார் பதிகத்திற் குறிக்கப்படும் இக்குறிப்புக்குப் பொருந்த "சம்பாதி யிருந்த சம்பாதிவனம்' இப்புகார் நகரத்தில் இருந்ததென மணிமேகலை கூறும் குறிப்பு அமைந்திருத்தல் காணலாம்.

ஐந்துவகை மன்றங்கள்

முற்காலத்தில் அசுரர்களால் தேவர்களுக்கு உண்டாகிய துன்பங்களைப் போக்கி வானோர் தலைவனாகிய இந்திரனுக்குச் சோழ மன்னன் ஒருவன் உதவி புரிந்தமையால் மகிழ்ச்சியடைந்த இந்திரன், அம்மன்னனுக்குத் தெய்வத்தன்மை வாய்ந்த ஐவகை மன்றங்களை உவந்து அளித்தான் என்பதும், அவ்வாறு அளிக்கப் பட்ட சிறப்புடைய மன்றங்கள் ஐந்தும் சோழர் தலைநகராகிய