உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

157

இப்புகார் நகரத்தே நிலைபெற்றிருந்தன என்பதும் முன்னர்க் கூறப்பட்டன. அம்மன்றங்களுள் வெள்ளிடை மன்றம் என்பது, புகார் நகரத் துறைமுகத்தை யொட்டிய பெருவெளியில் அமைந்திருந்தது. கடல்முற்றமாகிய இவ்விடத்திலே வெளிநாடு களிலிருந்து கடல் வழியாக வந்து இறங்கிய பல பண்டங்களும் இந்நாட்டிலிருந்து புறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தற்கெனக்

காணரப்பட்ட பல பண்டங்களும் தனித்தனி மூடைகளாகக் கட்டப்பட்டு அவற்றின் அளவும் நிறையும் எண்ணும் எழுதப் பெற்று அரசனது புலியிலச்சினை பொறிக்கப்பெற்றனவாய்க் குவிந்து கிடந்தன எனவும், கதவும் காவலும் இன்றி வெறு வெளியிற் குவித்து வைக்கப்பெற்றுள்ள பண்டங்களை இவ்விடத்தின் உண்மை நிலையுணராது எவரேனும் களவினாற் கவர்ந்து செல்ல முயன்றால் அப்பண்டப் பொதியினை அன்னோர் கழுத்து நடுங்கும்படி அவரது தலையிற் சுமத்தி அவர்களை அவ்விடத் திலேயே சுற்றித் திரியும்படி தண்டித்து வருத்தும் தெய்வம் ஒன்று இவ்விடத்தில் நிலைபெற்றிருந்தது எனவும் கூறுவர்.

66

வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த

கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்

உடையோர் காவலும் ஒரீஇய வாகிக்

கட்போ ருளரெனிற் கடுப்பத் தலையேற்றிக்

கொட்பி னல்லது கொடுத்த லீயாது

உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்"

என்பது சிலப்பதிகாரம்.

(சிலப். 5.111-117)

இலஞ்சி மன்றம் என்பது, கூனர் தொழு நோயாளர் முதலிய பிணியாளர்கள் தன்கண் முழுகியநிலையில் அவர்தம் நோயினைப் போக்கி அவர்களது உடம்பு நல்ல நிறம் பெற்று விளங்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்த பொய்கையைத்

தன்னகத்தே கொண்டு விளங்குவதாகும்.

66

கூனும் குறளும் ஊமும் செவிடும்

அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்