உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




158

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1

பழுதில் காட்சி நன்னிறம் பெற்று

வலஞ்செயலாக் கழியும் இலஞ்சி மன்றமும்"

என்பர் இளங்கோவடிகள்.

(சிலப். 5. 118-121)

வஞ்சனையால் மருந்தூட்டப்பட்டோர், நஞ்சு உண்டு வருந்துவோர், பாம்பினால் தீண்டப்பட்டோர் முதலியோர் தன்னை வலம்வந்த அளவில் அவர்தம் துயரத்தைத் தன்னொளி யாற் போக்க வல்லது நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமாகும்.

66

'வஞ்சம் உண்டு மயற்பகை யுற்றோர்

நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர் அழல்வாய் நாகத் தாரெயி றழுந்தினர் கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோர் சுழல வந்து தொழத்துயர் நீங்கும் நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்"

என்பது சிலப்பதிகாரம்.

66

(சிலப். 5, 122-127)

"தவ மறைந்து அல்லவை செய்யும் பொய் வேடத்தார், அரசனுக்கு உடனிருந்தே கேடுசூழும் தீய அமைச்சர்கள், பொய்ச்சான்று கூறுவோர் பிறர் மனை நயப்போர் முதலிய கொடியோர் எவரேனும் இந்நகரத்துள் நுழைவாராயின் அவர்கள் என் கையிலுள்ள பாசக் கயிற்றாற் பிணிக்கப்பட்டு என்கையிற் சிக்கிக்கொள்வார்கள்” என்ற இவ்வொலி இந்நகரத்தின் நாற்காத வட்டகை எல்லைவரை சென்று கேட்கும்படித் தனது கடிய குரலால் உணர்த்தி அத்தகைய கொடியோர்களைத் தன் கையிலுள்ள பாசத்தாற் பிணித்துவரச்செய்து நிலத்திற் புடைத் துண்ணும் பூதமானது நிலை பெற்றுள்ள இடம் டம் பூதசதுக்கம் எனப்படும்.

66

தவமறைந் தொழுகும் தன்மையிலாளர்

அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர் அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர் பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென்