உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




160

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1

பல நாட்டுப் பண்டங்களை நிறைய ஏற்றிக் கொண்டு இத்துறை முகத்தை நோக்கி வரும் பெரிய கப்பல்கள் பாய்மரங்களைத் தாழ்த்தாமல் இந்நகரத்தின் கரையை அணுகிச் சரக்குகளை எளிதில் இறக்கின என்ற செய்தி,

66

.கூம்பொடு

மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம், தகாஅர் இடைப்புலப் பெருவழிச் சொரியும் கடல்பல் தாரத்த நாடுகிழவோயே"

(புறம்.30)

எனச் சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாடலிற் குறிக்கப் பெற்றிருத்தல் காணலாம். இவ்வாறு கடல் வாணிகத்துக்கேற்ற முறையில் இயற்கைத் துறைமுகமாக விளங்கிய இந்நகரம், கரிகால் வளவன் முதலிய பெரு வேந்தர் களின் உலையாவூக்கத்தாலும், வெற்றித் திறத்தாலும் மேலும் பல செயற்கை வசதிகளையும் கடல் நடுவே இரவில் திசை அறியாது செல்லும் மரக்கலங்களை அழைக்கும் கலங்கரை விளக்கம் முதலிய சாதனங்களையும் பெற்றுத் தமிழ்நாட்டின் வாணிகவளர்ச்சிக்கேற்ற பேரூராகத் திகழ்வதாயிற்று.

பல்பொருள் வளங்கள்

கடல் வழியாகக் கப்பலில் வந்த குதிரைத் திரள்களும், கரியமிளகுப்பொதிகளும், வடமலையிற் பிறந்த ஒளிமிக்க நன்மணிகளும், பொதியின் மலையிலே பிறந்த சந்தனமும், தென்றிசைக் கடலிற் பிறந்த பவளமும், கங்கையாறு பாயும் வடநாட்டிலுண்டாகிய விளைபொருள்களும், காவிரிநதி பாயும் சோழ நாட்டில் விளைந்த நெல் முதலியனவும், ஈழநாட்டி லிருந்து வந்த நுகர் பொருள்களும், கீழ்நாடாகிய கடாரத்தி லுண்டாகிய பொருள்களும், சீன தேயம் முதலியவற்றிலிருந்து வந்த பச்சைக் கர்ப்பூரம் முதலிய அரும்பொருள்களும் இப்புகார்த் துறை முகத்தில் மலைபோற் குவிந்திருந்த தோற்றத்தைப் பட்டினப் பாலையில்,