உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

66

“ நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்துங் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி

வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்”

161

(பட்டினப்பாலை, 185 - 193)

என உருத்திரங்கண்ணனார் உள்ளவாறு விரித்துக் கூறி யுள்ளார். கடல் வாணிகத்தால் இந்நகரத்தில் வந்து குவிந்துள்ள செல்வ வளத்தை நேரிற் கண்டுணர்ந்த சேர முனிவராகிய இளங்கோஅடிகள்.

66

முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்

வழங்கத் தவா வளத்த தாகி

அரும்பொருள் தரூஉம் விருந்திற் றேஎம்

ஒருங்கு தொக்கன்ன உடைப்பெரும் பண்டம்”

(சிலப். மனையறம். 3-6)

என இவற்றைச் சிறப்பித்துப் பாராட்டுகின்றனர். பண்டை நாளில் இந்நகரத்தில் வாழ்ந்த வணிகப் பெருமக்கள் தம்முள் ஒற்றுமையுடையவராய்க் கடல் கடந்து கடாரம், சாவகம், சீனம் முதலிய புறநாடுகளுக்குச் சென்று வாணிகம் புரிந்து பொருளீட்டி யதுடன் தாம் சென்று தங்கிய புறநாடுகளிலும் தமது தாய் நாடாகிய தமிழ்நாட்டிலும் நல்லறங்கள் பலவற்றை விரும்பிச் செய்து புகழுடன் வாழ்ந்தமை பண்டை இலக்கியங் களாலும் அவர்கள் அறஞ்செய்த ஊர்களிற் காணப்படும் அறநிலையங்கள் கல்வெட்டுகள் முதலிய வரலாற்றுச் சான்று களாலும் நன்கு தெளியப்படும்.

வேந்தர்களும் புலவர்களும்

இந்நகரத்தில் வீற்றிருந்து செங்கோலோச்சிய பெருவேந்தர் களுள், நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி, கரிகால்வளவன், சேட்சென்னி நலங்கிள்ளி, கிள்ளிவளவன் என்போர் குறிப்பிடத்