உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




162

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

தக்கவராவர். இவர்களது ஆட்சித் திறத்தையும் பிற நலங்களையும், பத்துப்பாட்டு, புறநானூறு முதலான பழந் தமிழிலக்கியங்களால் நன்குணரலாம். கடைச்சங்க காலத்தில் இந்நகரத்தில் தோன்றிச் செந்தமிழ் வளர்த்த பெரும்புலவர்கள். காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்,

காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக்கண்ணனார். காவிரிப்பூம்பட்டினத்துச்சேந்தன் கண்ணனார், காவிரிப்பூம்பட்டினத்துச்செங்கண்ணனார்,

காவிரிப்பூம்பட்டினத்துப்பொன்வாணிகனார்மகனார் நப்பூதனார்

என்போராவர். இவர்களுள் நப்பூதனார் என்பார் பத்துப்பாட்டுள் ஒன்றாகிய “முல்லைப்பாட்டு” என்னும் அழகிய பனுவலைப் பாடிய புலமைச் செல்வராவர். கரிகால்வளவனது வெற்றித் திறத்தையும் கொடைச் சிறப்பையும் அவன் அரசு வீற்றிருக்கும் திருவுடை நகராகிய பூம்புகாரின் பெருமை யினையும் பாராட்டு முகமாகப் பத்துப்பாட்டுள் ஒன்றாகிய பட்டினப்பாலையைப் பாடி இந்நகரத்தில் கரிகால் வளவன் பேரவையில் அதனை அரங்கேற்றிப் பதினாறுநூறாயிரம் பொன்னுடன் பட்டி மண்டபத்தையும் பரிசிலாகப்பெற்ற பெரும் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாராவர். இவரால் பட்டினப்பாலையிற் சிறப்பிக்கப் பெற்ற பெருமை வாய்ந்தது, காவிரிப்பூம்பட்டின மாதலால் பட்டினம் என்ற பெயர் இந்நகருக்கே தொன்று தொட்டு வழங்குவதாயிற்று. சோழ மன்னர்களின் கல்வெட்டுகளிற் பட்டினப்பெருவழி எனக் குறிக்கப்பட்டது, காவிரிப்பூம்பட்டினத் திற்குச் செல்லும் பெருவழியேயாகும். கரிகால்வளவனால் ஆதரிக்கப்பெற்ற இப்பெரும்புலவர் அவனுக்குப் பின் நெடுங் காலம் உடல்நலத் துடன் வாழ்ந்திருந்தார்; பிற்காலத்தில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த சோழர் கிளையினனாகிய தொண்டை மான் இளந்திரையனது பெருமையினையும் கொடைத் திறத்தையும் பாராட்டு முகமாகப் பெரும்பாணாற்றுப்படை என்ற பாடலைப் பாடியுள்ளார்.

கரிகால்வளவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பொருநராற்றுப்படை என்ற பனுவலைப் பாடிய முடத்தாமக்