உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




180

4.

5.

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

கடற்கரையில் மாதவி பாடியது

தீங்கதிர் வாண்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல்

ஒவ்வா வேனும்

வாங்குநீர் முத்தென்று வைகலும் மால்மகன்போல்

வருதிர் ஐய

வீங்கோதந் தந்து விளங்கொளிய வெண்முத்தம்

விரைசூழ் கானல்

பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும்

புகாரே எம்மூர்.

மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து

மடவார் செங்கை

இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்

கறிகோம் ஐய

நிறைமதியு மீனும் எனஅன்னம் நீள்புன்னை

அரும்பிப் பூத்த

பொறைமலிபூங் கொம்பேற வண்டாம்ப லூதும்

புகாரே எம்மூர்.

உண்டாரை வெல்நறா ஊணொளியாப் பாக்கத்துள்

உறையொன் றின்றித்

தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதியாங்

கறிகோம் ஐய

வண்டால் திறையழிப்பக் கையான் மணல்முகந்து

மதிமேல் நீண்ட

புண்தோய்வேல் நீர்மல்க மாதர் கடல்தூர்க்கும்

புகாரே எம்மூர்.

28

29

7.

30

- சிலப், கானல்வரி.

உள்வரி வாழ்த்து

பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணான்டான் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்