உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




186

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

பிற்சேர்க்கை III

காவிரியாற்றின் வடபுறத்துக் கழிமுனைமருங்கே அமைந்திருந்த காவிரிப்பூம்பட்டினம், சோழரின் தலைமைத் துறைமுகமாகத் திகழ்ந்தது. இதன்கண் அழகிற் சிறந்த மாளிகையொன்றை அரசர் எடுப்பித்துக் காத்துவந்தனர்; மேலும், அயல் நாட்டு வணிகர் இதனை இனிமையும் பயனும் அளிக்கும் உறைவிடமாகக் கருதுவாராயினர். ஒருகால், செல்வச் சிறப்புடையதாய் மிளிர்ந்த இந்த வளநகர் அழிந்தொழியவும், அவ்விடம் இன்று உயர்ந்த மணற்குவியலின் கீழ்ப் புதைந்து கிடக்கிறது.

-

ஸ்மித்.

காவிரியாற்றின் கழிமுகத்தின் கண் இடம் பெற்ற புகார் அல்லது காவிரிப்பூம்பட்டினம், ஒரு காலத்தில் செல்வச் சிறப்பும் செழுமை நலமும் வாய்ந்த துறைமுகமாகக் துலங்கியது.

சோழர்கள் நிகழ்த்திய நீர்வாணிபத்தில், பருத்தி நூலாடை முதற்பொருளாக மிளிர்ந்தது. இதற்கென இவர்கள் வைத்து நடாத்திய சுறுசுறுப்புள்ள கடற்படை, ஐராவதி கங்கைக் கழிமுகங்கள் மட்டுமேயன்றி மலேயத்தீவத் தொகுதிவரை பாய் விரித்தேகவும் அஞ்சிற்றில்லை.

ஸ்மித்.

கிழக்குக் கடற்கரையிலே, காவிரியாற்றின் வடகிளை கடலொடு கலக்கும் இடத்தில் அமைந்த தொழிற் செறிவுள்ள துறைமுகமாகிய காவிரிப் பட்டினம் அல்லது புகாரில் பிறிதொரு உறைவிடம் வகுத்துக்கொண்டனர். அயல்நாட்டு வந்தேறு குடியினர். நெடுங்காலத்திற்கு முன்னர் மறைந்தொழிந்த அந்நகரும், நகரின் துறைமுகமும், இன்று பரந்த மணல்மேட்டின் கீழ்ப் புதையுண்டு கிடக்கின்றன. யவன நாட்டு முந்திரிச்சாற்று