உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




188

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

காலை யரும்பி மலருங் கதிரவனும்

மாலை மதியமும்போல் வாழியரோ - வேலை அகழால் அமைந்த அவனிக்கு மாலைப் புகழால் அமைந்த புகார்.

காலையில் உதித்து ஒளிவிரியும் பரிதியும், மாலையில் உதிக்கும் வளருமியல்புடைய திங்களும் போல, வாழ்வதாக; கடலாகிய அகழோடு அமைந்த புவனிக்கு, மாலையெனப் படும் புகழோடு பொருந்திய காவிரிப் பூம்பட்டினம்.