உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செம்பியன் மாதேவித் தல வரலாறு

திருவிழாக்கள்:

199

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் பிரமோற்சவமே பெரிய திருவிழா ஆகும். மார்கழி மாதத்தில் திருவாதிரை விழாவும் சிறப்பாக நடந்து வருகின்றது. அன்றியும், ஆனியில் திருமஞ்சனமும், ஆடியில் பூரமும், ஆவணியில் பிள்ளையார் சதுர்த்தியும், புரட்டாசியில் நவராத்திரி யோடு விசயதசமியும், ஐப்பசியில் சூரசங்காரமும், கார்த்திகையில் கார்த்திகை தீபமும், தையில் பூசமும், மாசியில் மகமும் அவ்வம் மாதங்களில் நடந்து வரும் திருவிழாக்கள் ஆகும். இக்கோயிலுக்குரிய இரண்டு தேர்களும் பழுதுற்ற நிலையில் உள்ளன.

கோயிலின் வருவாயும் நிர்வாகமும் :

இக்கோயிலுக்கு நன்செயில் 279 ஏக்கர் 81 செண்டும், புன்செயில் 115 ஏக்கர் 10 செண்டும் நிலங்கள் உண்டு. ஆண்டு தோறும் அவற்றிலிருந்து கிடைத்து வரும் சராசரி மொத்த வருவாய் ஏறத்தாழ ரூ.25,000 ஆகும்.

இக்கோயில் நிர்வாகம் சென்னை இந்து அறநிலையப் பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் 1947-ல் உத்தரவிட்ட ஒரு திட்டத்தின்படி (Scheme) நடந்து வருகின்றது. மூன்று பேருக்குக் குறையாத டிரஸ்டிகளும் மேற்படி இலாகாவினால் நியமனஞ் செய்யப் பெற்ற ஒரு நிர்வாக அதிகாரியும் இக்கோயிலைப் பரிபாலித்து வருகிறார்கள். நிர்வாகம், இந்து அறநிலையப் பாதுகாப்பு இலாகாவின் 1951-ஆம் ஆண்டின் சட்டங்களுக்கும் விதிகளுக்கும் உட்பட்டு நிகழ்ந்து வருகின்றது. சில சிறப்புக் குறிப்புகள்:

(1) சென்னை அறநிலைய இலாக்கா ஆணையர் விரும்பிய படி நிர்வாக அதிகாரியால் சோழர் பேரரசியார் செம்பியன் மாதேவியாருக்குக் கோயிலில் ஒரு தனி மண்டபம் கட்டப் பெற்றுள்ளது. (2) ரூ.40,000 -க்குத் திருப்பணி நடைபெற்று வருகிறது. (3) தஞ்சை ஜில்லா போர்டு மருத்துவ நிலையத்திற்கு ஒரு கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. (4) பொது