உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

75

அவ்விழாவிற்கு வரும் அடியார்களை உண்பித்துப் பொருளுதவி புரிதற்கும் நிவந்த மாகப் புறத்தாய நாடு முழுவதையும் இவன் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.1

மாறவர்மன் சீவல்லபன்

1

இவன் கி. பி. 1132-ஆம் ஆண்டில்' பட்டம்பெற்ற ஒரு பாண்டிய மன்னன் ஆவன். வன் மேலே குறித்துள்ள சடைய வர்மன் பராந்தகனுக்கு என்ன முறையினன் என்பது புலப்பட வில்லை. இவன் மெய்க்கீர்த்தி ‘பூமகள் சயமகள் பொலிவுடன் தழைப்ப என்று தொடங்கும். திருவாங்கூர் நாட்டையாண்ட வீரரவிவர்மன் என்ற சேரமன்னன் இவனுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்தான் என்று தெரிகிறது.4 இப் பாண்டிவேந்தன் கல்வெட்டுக்கள் திருநெல்வேலி ஜில்லாவில் பல ஊர்களில் உள்ளன. இவன் கி. பி. 1162 வரையில் தென்பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்தமை அறியற்பாலதாகும்.

சடையவர்மன் குலசேகரபாண்டியன்

$5

இவன் மாறவர்மன் சீவல்லனுடைய புதல்வன். கி.பி. 1162-ஆம் ஆண்டில் முடிசூட்டப்பெற்றவன். இவன் மெய்க் கீர்த்தி, ‘பூதலமடந்தை என்று தொடங்குவதாகும். இவன் திருநெல்வேலியிலிருந்து பாண்டிநாட்டின் தென்பகுதியை ஆட்சிபுரிந்து கொண்டிருந்த நாட்களில், பராக்கிரம பாண்டியன் என்பான் மதுரையிலிருந்துகொண்டு பாண்டியநாட்டின் வடபகுதியை ஆண்டுவந்தனன். தாயத்தினராகிய இவ்விரு வேந்தர்க்கும் பாண்டியநாடு முழுவதையும் அரசாளும் உரிமை பற்றிப் பகைமை யுண்டாயிற்று. குலசேகர பாண்டியன் மதுரைமாநகர்மீது படையெடுத்துச் சென்று அதனை முற்றுகை யிட்டான். பராக்கிரம பாண்டியன் இலங்கையரசனாகிய பராக்கிரம பாகுவைத் தனக்குப் படையனுப்பி உதவிபுரியுமாறு

1. Travancore Archaeological Series, Vol. I, pp. 19-25.

2. Indian Antiquary, Vol. 44, p. 255.

3. Travancore Archaeological Series. Vol. IV, No. 28.

4. Ep. Ind., Vol. XXV, p.84.

5. S. I. I., Vol. V, Nos. 293 and 296.