உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பராக்கிரமபாண்டியன்

1

வன் முதற்குலோத்துங்க சோழன் காலத்திலிருந்த பாண்டியருள் ஒருவன் என்றும், சடையவர்மன் சீவல்லபனுக்குப் பின்னர் ஆட்சிபுரிந்தவன் என்றும் தெரிகின்றது. இவன் மெய்க்கீர்த்தி, 'திருமகள்புணர' என்று தொடங்குவதாகும். விக்கிரமங்கலத்திலுள்ள இவனது இருபத்து மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றில் குலோத்துங்க சோழனது நாற்பதாம் ஆட்சியாண்டு குறிக்கப்பட்டுள்ளமை உணரற் பாலதாம்.'

சடையவர்மன் பராந்தக பாண்டியன்

இவன் குலோத்துங்க சோழன் ஆட்சியின் பிற்பகுதியிலும் அவன் மகன் விக்கிரம சோழன் ஆளுகையின் முற்பகுதியிலும் பாண்டி நாட்டிலிருந்த வேந்தன் ஆவன். இவன் பராக்கிரம பாண்டியனுக்கு எம்முறையினன் என்பது தெரியவில்லை. இவனது மெய்க்கீர்த்தி 'திருவளரச் செயம் வளரத் தென்னவர்தங் குலம் வளர என்னுந் தொடக்கத்தையுடையது. அம் மெய்க் கீர்த்தி, இவன் சேர மன்னனை வென்று திறை கொண்டதையும், காந்தளூர்ச் சாலையில் கலமறுத்ததையும், விழிஞம் என்ற நகரைக் கைப்பற்றியதையும், தெலுங்க வீமனது தென் கலிங்க நாட்டைத் தன்னடிப்படுத்தியதையும், திருவனந்தபுரத்தில் எழுந்தருளியுள்ள திருமாலுக்குப் பத்து மணி விளக்குகள் அமைத்ததையும், கூபகத்தரசன் மகளை மணந்து கொண்டதையும், அளப்பனவும் நிறுப்பனவுமாகிய கருவிகளிற் கயல் முத்திரையைப் பொறித்து அவற்றை ஒழுங்குபடுத்தியதையும் உணர்த் துகின்றது. இவன் வென்ற தெலுங்க வீமனை விக்கிரமசோழனும் வென்றானென்று அவன் மெய்க்கீர்த்தி அறிவிப்பதால் இவ்விரு வேந்தரும் சேர்ந்து அத்தென் கலிங்க மன்னனை வென்றிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். பாண்டியருடைய குலதெய்வமாகிய கன்னி பகவதிக்கு ஆண்டுதோறும் தைப்பூசவிழா நடத்துவதற்கும்

1. A. R. E. for 1909. part II. para 29; A. R. E. for 1910, part II, para 32. 2. Tamil and Sanskrit Inscriptions, Edited by J. Burgess and S.M. Natesa Sastri, p. 13.

3. Travancore Archaeological Series, Vol I, No. 3.