உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

73

றந்தனன். அக்காலத்தில் சோழ மண்டலத்தில் பட்டத்திற் குரிய சோழ அரசகுமாரன் ஒருவனும் இல்லை. அதனால், சோழ இராச்சியம் பெருங்குழப்பத்திற்குள்ளாகி அல்லலுற்றது. அந்நாட்களில் சோழ மன்னர்களின் பிரதிநிதிகளாகப் பாண்டி நாட்டிலிருந்து அரசாண்டு வந்த சோழ பாண்டியரின் ஆட்சியும் அங்கு நடைபெறாமல் ஒழிந்தது. அச்சமயத்தில் பாண்டியர் சிலர், இழந்த தம் நாட்டைக் கைப்பற்றி, கி.பி. 1081 வரையில் அமைதியாக ஆண்டுவந்தனர்.

பிறகு, சோழ மண்டலத்தின் அரசுரிமை எய்தி அதன் முடிமன்னனாக வீற்றிருந்து ஆட்சிபுரிந்த முதற் குலோத்துங்க சோழன் கி. பி. 1081-ல் பாண்டி நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கு ஆண்டுகொண்டிருந்த பாண்டியர் ஐவரையும் போரில் வென்று அந்நாட்டைக் கைப்பற்றி வெற்றித் தூண்களும் நிறுவினான். அச்செய்தி, முதற்குலோத்துங்க சோழனது மெய்க்கீர்த்தியில்' சொல்லப்பட்டிருப்பதோடு அவன் மீது ஆசிரியர் சயங்கொண்டார் பாடியுள்ள கலிங்கத்துப் பரணியிலும் கூறப்பட்டுள்ளது. அச் சோழ மன்னன்பால் தோல்வியுற்ற பாண்டியர் ஐவர் யாவர் என்பது இப்போது புலப்படவில்லை. எனினும், அவன் காலத்திலிருந்த பாண்டியர் சிலர் செய்திகளை அடியிற் காணலாம்.

2

சடையவர்மன் சீவல்லபன்

ரு

இவன் முதற் குலோத்துங்க சோழன் காலத்திலிருந்த பாண்டிய அரசர்களுள் ஒருவன். இவன் மெய்க்கீர்த்தி "திரு மடந்தையும் சய மடந்தையும்" என்று தொடங்குகிறது. இவன் கல்வெட்டுக்கள், திருநெல்வேலி மதுரை ஜில்லாக்களில் காணப்படுகின்றன.

1.

‘தன்பெருஞ் சேனை யேவிப் பஞ்சவர், ஐவரும் பொருதப் போர்க்களத் தஞ்சி, வெரிநளித் தோடி அரணெனப் புக்க, காடறத் துடைத்து நாடடிப் படுத்து’

குலோத்துங்கன் I, மெய்க்கீர்த்தி

2. ‘விட்ட தண்டெழ மீனவர் ஐவருங், கெட்ட கேட்டினைக் கேட்டிலை போலுநீ'

3. S. I. I., Vol.V, Nos. 294 & 298; 30 & 32 of 1909.

கலிங்கத்துப்பரணி -368.