உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 அனுப்பப்பெற்ற அரசப்பிரதிநிதிகளுக்கு அடங்காது உள் நாட்டிற் கலகம் விளைத்த காரணம் பற்றி இவர்களோடு இராசாதிராசசோழன் போர் நிகழ்த்துவது இன்றியமையாறித தாயிற்று. அப்போரில் மானாபரண பாண்டியனும் வீரகேரள பாண்டியனும் கொல்லப்பட்டனர்; சுந்தர பாண்டியன் தோற்றோடி முல்லையூரில் ஒளிந்துகொண்டான்; விக்கிரம பாண்டியன் ஈழ மண்டலத்திற்கு ஓடிவிட்டான். வீரபாண்டியன் என்பான் இராசாதிராச சோழனால் கி. பி. 1048 -ல் கொல்லப் பட்டானென்று கோலார் ஜில்லாவில் மிண்டிக்கல் என்னு மிடத்திலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.1 இச் செய்தி இராசாதிராச சோழனது திருக்களர்ச் செப்பேட்டிலும் குறிக்கப் பட்டுள்ளது இங்குக் குறிக்கப்பெற்ற பாண்டியர் ஐவர் வரலாற்றையும் உணர்த்தக்கூடிய கருவிகள் கிடைக்கவில்லை. சீவல்லப பாண்டியன்

2

இவன் இரண்டாம் இராசேந்திர சோழன் காலத்திலிருந்த ஒரு பாண்டி வேந்தன் ஆவன். இவன் சோழ மன்னனுக்குத் திறை செலுத்திக் கொண்டு பாண்டிநாட்டில் ஒரு பகுதியை ஆட்சி புரிந்து கொண்டிருந்தவனாதல் வேண்டும். கி. பி. 1054-ல் இவன் பட்டத்தரசி, சோழ நாட்டிலுள்ள திருவியலூர்க் கோயிலுக்குப் பல அணிகலன்கள் வழங்கிய செய்தி அவ்வூர்க் கல்வெட் டான்றால் அறியப்படுகிறது.'

பாண்டியன் வீரகேசரி

இவன் சீவல்லப பாண்டியனுடைய மகன் ஆவன். இவன் வீரராசேந்திர கோழனோடு கி. பி. 1065-ல் போர் புரிந்து உயிர் துறந்தானென்று அச்சோழ மன்னன் மெய்க்கீர்த்தியால் தெரிகிறது.

சோழ நாட்டில் வீரராசேந்திர சோழன் இறந்த பின்னர், அவன் புதல்வன் அதிராசேந்திர சோழன் சில திங்கள் ஆட்சி புரிந்து கி. பி. 1070-ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்டு

1. Ep. Ind., Vol. IV, No. 31. 2.S.I.I., Vol. III, No. 208. 3. Ins. 46 of 1907.