உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

71

என்று குறித்தும் இருத்தலால் அவன் பாண்டியர் சிலரைப் போரில் வென்றி ருத்தல் வேண்டும் என்பது நன்கறியக் கிடக்கின்றது. எனவே, இராசராசசோழன் காலத்தில் பாண்டியர் சிலர் இருந்தனர் என்பதும், அவர்களை அவன் வென்று அடக்கி விட்டனன் என்பதும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளிற் கூறப்பெற்ற பாண்டியன் அமரபுயங்கன் என்பான் அன்னோர்க்குத் தலைவனாயிருத்தல் வேண்டும் என்பதும் தெள்ளிதிற் புலனாதல் காண்க.

முதல் இராசராசசோழன் மகனாகிய முதல் இராசேந்திர சோழன் தன் ஆட்சியின் தொடக்கத்தில் தன் புதல்வர்களுள் ஒருவனுக்குச் 'சோழபாண்டியன்' என்ற பட்டமளித்துப் பாண்டிநாடாகிய இராசராச மண்டலத்திற்கு அரசப் பிரதி நிதியாக மதுரையில் வீற்றிருந்து ஆண்டுவருமாறு அனுப்பினான்.' அவன் இங்ஙனம் செய்தமைக்குக் காரணம் தோல்வியுற்ற பாண்டியர் சிறிது வலிமையெய்தியவுடன் சோழர்க்குத் திறை செலுத்தாது முரண்பட்டு வந்தமையேயாம். சோழ மன்னர்களின் பிரதிநிதிகளாகச் 'சோழபாண்டியர்' என்ற பட்டத்தோடு மதுரையிலிருந்து ஆட்சி புரிந்தோர், முதல் இராசேந்திர சோழன் மகன் சுந்தரசோழ பாண்டியன், விக்கிரம சோழ பாண்டியன் பராக்கிரம சோழ பாண்டியன் என்போர்.' அவர்கள் கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் காணப்படுகின்றன. எனவே, சோழ பாண்டியரது ஆளுகை பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் ஒருங்கே நடைபெற்ற தென்பது நன்கு துணியப்படும். அந்நாடுகளில் அன்னோரது ஆட்சியும் கி. பி. 1020 முதல் 1070 வரையில் நிலைபெற்றிருந்தது என்பது அறியற்பாலதாகும்.

மானாபரணன், வீர கேரளபாண்டியன், சுந்தர பாண்டியன், விக்கிரம பாண்டியன், வீர பாண்டியன்

இவர்கள், முதல் இராசாதிராச சோழன் காலத்திற் பாண்டிநாட்டிலிருந்த மன்னவர்களாவர். சோழர்களால்

1. S. I. I., Vol, III, No. 205, Verses 91-93.

2. Annual Report on Epigraphy for 1916-17, part II, para 3.