உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

இவ்

வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 வீரபாண்டியற்குப் பின்னர், பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம்வரையில் ஆட்சிபுரிந்த பாண்டியர்கள் சோழர்களுக்குத் திறை செலுத்தும் சிற்றரசர்களாக இருந்தமையின் அவர்கள் வரலாற்றை அறிந்து கொள்ளுதற்குரிய கல்வெட்டுக்கள் பாண்டிநாட்டிற் கிடைக்கவில்லை. முதல் இராசராசசோழன், முதல் இராசாதிராச சோழன் முதலான சோழ மன்னர்கள் கல்வெட்டுக்களில் அவர்களால் வென்றடக்கப்பட்டவர் களாகக் குறிக்கப்பெற்றுள்ள பாண்டியர் பெயர்கள் மாத்திரம் காணப்படுகின்றன. அத்தகைய பாண்டியர் வரலாற்றையும் அக் கல்வெட்டுக்களின் துணைகொண்டு தொடர்பாக அறிய யலவில்லை. இதுகாறும் ஆராய்ந்து கண்ட சில செய்திகளே அடியில் எழுதப் பெறுவன.

அமரபுயங்கன்

இப்பாண்டி வேந்தன் முதல் இராசராச சோழனால் வென்றடக்கப் பெற்றவன் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடு களால்' அறியப்படுகின்றது. இவன் யாருடைய புதல்வன் என்பதும் எப்போது பட்டத்திற்கு வந்தனன் என்பதும் புலப்படவில்லை. இராசராசசோழன் சேரநாட்டின்மேல் படை யெடுத்துச் சென்ற போது அவனை இவ்வமரபுயங்கன் இடையில் தடுத்துப் போர் புரிந்தான். அக்காரணம் பற்றியே அவன் தன் திக்குவிசயத்தின் போது முதலில் இப்பாண்டியனை வென்று இவனது நாட்டையும் கைப்பற்றிக் கொண்டான். பிறகு அச் சோழமன்னன், பாண்டிநாடு சேரநாடு ஆகிய இரண்டிற்கும் இராசராசமண்டலம் என்று பெயரிட்டுத் தன் ஆட்சிக் குள்ளாக்கினான். அது முதல், இராசராச சோழனுக்குப் பாண்டியகுலாசனி என்னுஞ் சிறப்புப் பெயர் வழங்கியது. அவன் கல்வெட்டுக்களும் பாண்டிநாட்டில் யாண்டும் காணப்படுகின்றன.' அவன் தன் மெய்க்கீர்த்தியில் 'செழியரைத் தேசு கொள் கோவிராசகேசரிவர்மன்' என்று கூறிக் கொள்வதோடு தஞ்சைப் பெரிய கோயிற் கல்வெட்டுக்களில் 'மலைநாட்டுச் சேரமானையும் பாண்டியர்களையும் எறிந்து

1. S. I. I., Vol. III, No. 205, Verses 76-79.

2. Ins. 7 of 1927; Ins. 333 of 1923; Ins. 119 of 1905. Ep. Ind. Vol. V., p.46. 3. S. I. I., Vol. II, No. 59.

$3