உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

69

னென்று ஆனைமங்கலச் செப்பேடு கூறுகின்றது.' சுந்தர சோழன் கல்வெட்டுக்கள் அவனை மதுரை கொண்டகோ இராசகேசரி வர்மன் எனவும் பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள் ஸ்ரீ சுந்தர சோழதேவர்' எனவும் குறிப்பிடுவதால் அவன் வீரபாண்டியனைச் சேவூர்ப் போரில் வென்ற செய்தி உறுதியாதல் உணரத்தக்கது. எனவே, வீரபாண்டியன் சுந்தர சோழனைப் போரிற் கொன்றனன் என்று கூறுவது எவ்வாற்றானும் பொருத்தமுடைய தன்று. ஆகவே, வீர பாண்டியனால் கொல்லப்பட்ட சோழன் யாவன் என்பது தெரியவில்லை. எனினும், அவன் சோழ அரச குமாரர்களுள் ஒருவானாயிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை.

இனி, சுந்தரசோழன் முதல் மகனும் முதல் இராசராச சோழன் தமையனுமாகிய ஆதித்த கரிகாலன் என்பான், வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பர கேசரி வர்மன்' என்று பல கல்வெட்டுக்களில்' குறிக்கப்பட்டி ருத்தலால் அவன் வீரபாண்டியனைப் போரிற் கொன்றிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலனாகின்றது. வீரபாண்டியன் சோழ அரசகுமாரன் ஒருவனைக் கொன்ற காரணம்பற்றி ஆதித்த கரிகாலனும் கொடும்பாளூர் மன்னன் பூதி விக்கிரமகேசரியும் ஒருங்கு சேர்ந்து இப்பாண்டி வேந்தனோடு போர்புரிந்து இவனைக் கொன்றிருத்தல் வேண்டும். இந்நிகழ்ச்சி ஆதித்த கரிகாலனது

5

6

ரண்டாம் ஆண்டுக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றிருத்தலால்' இவ்வீரபாண்டியன் கி.பி.966 ஆம் ஆண்டில் போரில் இறந்தனன் எனலாம். இவன் கல்வெட்டுக்கள் இருபதாம் ஆட்சியாண்டிற்குப் பிறகு காணப்படாமையால் இவன் அவ்வாண்டில் இறந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

1. Ep. Ind., Vol. XXII, No. 34, Verse 25.

2. S. I. I., Vol. III, Nos. 115-118.

3. Ep. Ind., Vol. XII, No. 15; Ins. 302 of 1908.

4. S. I. I., Vol. III, Nos. 200-204.

5. Ibid, No. 205, Verses 67 and 68.

6. Inscriptions of the Pudukkottai State No. 14.

7. S. I. I., Vol. III, No. 199.

8. Ep. Ind., Vol. XXV, No. 6.