உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

இராமநாதபுரம் ஆகிய ஜில்லாக்களில் காணப்பட வில்லை. ஆனால், வீரபாண்டியன் கல்வெட்டுக்கள் மாத்திரம் அவ்விடங் களில் உள்ளன என்பது முன்னர் விளக்கப் பட்டுள்ளது. எனவே, வீரபாண்டியன் பாண்டி நாட்டில் முடிமன்னனாக வீற்றிருந்து சோழர்க்குத் திறை செலுத்தாமல் அதனை ஆட்சி புரிந்து வந்தனனாதல் வேண்டும்.

ம்

இனி, வீரபாண்டியன் தன் கல்வெட்டுக்களில் ஆறாம் ஆட்சி ஆண்டு முதல் 'சோழன் தலைகொண்ட கோவீர பாண்டியன்" என்று தன்னைக் குறித்துள்ளமையின், இம் மன்னன் ஒரு சோழனைப் போரில் கொன்றிருத்தல் வேண்டு மென்பது நன்கு புலப்படுகிறது. வீரபாண்டியனாற் கொல்லப் பட்டவன் அரிஞ்சயன் புதல்வனும் முதல் இராசராச சோழன் தந்தையுமாகிய சுந்தரசோழனாயிருத்தல் வேண்டுமென்று ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர்.2 அன்னோர் கொள்கைக்குச் சில சான்றுகள் முரணாக உள்ளன. சுந்தர சோழனுக்குப் ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவர்' என்ற பெயர் அவன் இறந்த பிறகு வழங்கியுள்ளது என்பது சில கல்வெட்டுக்களால் அறியப்படு கின்றது. பொன்மாளிகை என்பது சோழ மன்னரது ஆட்சிக் காலங்களில் காஞ்சி மாநகரிலிருந்த அரண்மனைகளுள் ஒன்று என்பது கலிங்கத்துப் பரணியாலும் கல்வெட்டுக்களானும்5 நன்குணரக் கிடக்கின்றது. எனவே, சுந்தரசோழன் காஞ்சியிலிருந்த அம்மாளிகையில் இறந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது. ஆகவே, அவன் வீர பாண்டியனால் போரில் கொல்லப் பட்டான் என்று கூறுவதற்குச் சிறிதும் இடமில்லை என்க.

4

அன்றியும், கி. பி. 962-ஆம் ஆண்டில் சுந்தரசோழன் வீரபாண்டியனைச் சேவூர் என்ற இடத்தில் போரில் வென்றா

1. S. I. I., Vol. V. No.455.

2. சோழவமிச சரித்திரச் சுருக்கம், பக். 11.

3. S. I. I., Vol. II. pp. 72 and 74; Ibid, Vol. V. Nos. 723 and 980.

4. அம்பொன்மேரு அதுகொல் இதுகொலென்று

ஆயிரங்கதிர் வெய்யவ னையுறுஞ்

செம்பொன் மாளிகைத் தென்குட திக்கினிற்

செய்த சித்திர மண்டபந் தன்னிலே'

5. S. I. I., Vol. III, No. 142.

- (S. LIIT 600F). LIIT. 302)