உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு வீரபாண்டியன்

5

3

4

67

ஒரு

இவ்வேந்தன் இராசசிம்ம பாண்டியன் புதல்வன் என்பது திருநெல்வேலி ஜில்லா திருப்புடைமருதூரிலுள்ள கல்வெட்டால் உய்த்துணரப் படுகிறது.1 இவன் பாண்டி மார்த்தாண்டன், சோழாந்தகன் என்ற சிறப்புப் பெயர்களை யுடையவன்;2கி. பி. 946 முதல் 966 வரையில் பாண்டி நாட்டில் அரசாண்டவன்; இவன் கல்வெட்டுக்கள் திருநெல்வேலி, இராமநாதபுரம் ஜில்லாக்களிலும் திருவாங்கூர் நாட்டின் தென் பகுதியிலும் உள்ளன. அன்றியும், இவனது ஆட்சியின் ஒன்பது பத்தாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் மதுரை ஜில்லா திருமங்கலந் தாலூகாவிலுள்ள கீழ்மாத்தூர்க் கோயிலிலும் காணப் படுகின்றன. அக் கல்வெட்டுக்களை நோக்குமிடத்து, இவன் தனக்குரிய பாண்டி மண்டலத்தைச் சோழ மன்னனிட மிருந்து கைப்பற்றி ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும் என்பது வெளி யாகின்றது. இவன் பாண்டி நாட்டைக் கைப்பற்றித் தன் ஆளுகைக்குட்படுத்தியது, முதற்பராந்தக சோழனது ஆட்சியின் இறுதிக் காலத்திலாதல் அவன் மகன் முதற் கண்டராதித்த சோழன் ஆட்சியின் தொடக்கத்திலாதல் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அந்நாட்களில் இராட்டிரகூட மன்னன் மூன்றாங் கிருஷ்ணதேவன் என்பான் சோழ இராச்சியத்தின்மேல் படை யெடுத்துவந்து அதன் வடபகுதியைக் கைப்பற்றிக் கொண்ட மையால் சோழ மன்னர்கள் தம் ஆளுகையின் கீழ் வைத்துக் கொண்டிருந்த பாண்டி நாட்டைப் பாதுகாக்க முடியாத நிலையில் இருந்தனர். காலங்கருதிக் கொண்டிருந்த வீர பாண்டியனும் முடிசூடிக்கொண்டு பாண்டிநாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். அதற்கேற்ப, முதற் பராந்தக சோழனுக்குப் பின்னர் அரசாண்ட கண்டராதித்தன், அரிஞ்சயன் முதலான சோழமன்னர்களின் கல்வெட்டுக்கள், மதுரை, திருநெல்வேலி,

1. Ins. 122 of 1905; T. A. S., Vol. III p. 63

2. Annual Report on South Indian Epigraphy for 1932-33; part II.para 30; Ibid for 1935-36, part II para 47.

3. Ep. Ind. Vol. XXV. No. 6.

4. T. A. S. Vol. III, Nos. 22-26.

5. Ins. Nos. 624 and 625 of 1926; S. I. I., Vol. V. No. 304.