உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

இந்நூலை எழுதத் தூண்டி இதற்கு அணிந்துரையும் வரைந்துதவிய கரந்தைத் தமிழ்ச்சங்கத் தலைவர், செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் காலஞ்சென்ற இராவ்சாகிப், த.வே. உமாமகேசுவரம் பிள்ளையவர்களது தமிழ்த்தொண்டு என்றும் நினைவு கூர்தற்குரியதாகும்.

சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் தமிழ்ப்பாடக் குழுவினர் இந்நூலைப் புலவர் தேர்விற்குரிய பாடநூல்களுளொன்றாகத் தெரிந்தெடுத்துள்ளனர். அவர்கட்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனைக் கண்கவர் முறையில் அச்சிட்டுதவிய சென்னைச் சாது அச்சுக் கூட நிர்வாகி திரு. மு. நாரயணசாமி முதலியார் அவர்களுக்கும் 'புரூப்' திருத்தி உதவிய என் அரிய நண்பர், தமிழாராய்ச்சித் துறை விரிவுரையாளர் வித்வான் - க. வெள்ளைவாரணர் அவர்கட்கும் எனது நன்றியுரியதாகும்.

அண்ணாமலை நகர்,

207-1956

ங்ஙனம்,

T. V. சதாசிவ பண்டாரத்தார்