உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3

1. முன்னுரை

.

அமிழ்தினுமினிய நம் தமிழ்மொழியைத் தாய்மொழி யாகக் கொண்டு நிலவும் இந்நிலப்பரப்பு முற்காலத்தே தமிழகம் என்று வழங்கப்பெற்றதென்பது தொன்னூலாராய்ச்சி யுடையார் யாவரும் அறிந்ததொன்றாம். இப்போது இதனைத் தமிழ்நாடு என்றே யாவரும் கூறுவாராயினர். இது வடக்கில் வேங்கடமும் தெற்கிற் குமரிமுனையும் கிழக்கிலும் மேற்கிலும் இரு பெருங்கடலும் உடையதாயிருக்கின்றது. இத் தமிழகத்தைக் குடபுலம் குணபுலம் தென்புலம் என்ற மூன்று பெரும் பகுதி களாகப் பிரித்துப் பண்டைக்காலமுதல் ஆட்சி புரிந்துவந்தோர், சேர சோழ பாண்டியர் என்னும் தமிழ் மூவேந்தரேயாவர். இன்னோர் ஆட்சிபுரிந்த பகுதிகள் முறையே சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம் எனப்படும். இவற்றுள் பாண்டிய மண்டலத்தின் அரசுரிமை யுடையராய்ப் பண்டைக் காலத்தே விளக்க முற்றிருந்த பாண்டிய அரசர்களின் வரலாறே ஈண்டு யாம் ஆராயப்புகுந்தது.

இப்பாண்டியர் படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டு வரும் தொல்குடியினரென்பது அறிஞர்களது கொள்கை. இக்குடியினர் எக்காலத்து இப்பாண்டி மண்டலத்தை ஆட்சி புரியும் உரிமையெய்தின ரென்றாதல், எவ்வேந்தரால் இதன் ஆட்சி முதன்முதலாகக் கைக்கொள்ளப்பட்டதென்றாதல் அறிந்துகொள்ளக் கூடவில்லை. ஆகவே, எவரும் ஆராய்ந்து அளந்து காண்டற்கரிய அத்துணைத்தொன்மையுற்ற குடியினர் இன்னோர் என்பது பெறப்படுகிறது.

இனி, வடமொழியாளர் ஆதி காவியமெனக் கொண்டாடும் வான்மீகி ராமாயணத்தில் தமிழ் நாட்டைப் பற்றிய உயரிய செய்திகள் பல காணப்படுதலோடு, பாண்டி வேந்தரது தலைநகர்