உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

பொன்னாலும் முத்துக்களாலும் அலங்கரிக்கப் பெற்ற கோட்டை வாயிலையுடையதாய் இருந்தது எனவும் சொல்லப்பட்டுள்ளது. அன்றியும், வியாசமுனிவரது மகாபாரதத்தே, பாண்டவருள் ஒருவனாய அருச்சுனன் ஒரு பாண்டியர்குலப் பெண்மணியை மணந்த செய்தி காணப்படுகின்றது.

கி.மு.

இங்ஙனமே வடமொழியிலுள்ள புராணங்களிலும் தமிழரசர்களைப் பற்றிய செய்திகள் காணப்படாமலில்லை. நான்காம் நூற்றாண்டினரெனக் கருதப்படும் காத்தியாயனர்; பாணினிவியாகரணத்திற்குத் தாம் வரைந்த வார்த்திகம் என்ற உரையுள் ‘பாண்டிய' என்னும் மொழிக்கு லக்கணம் வகுத்துள்ளனர். அன்றியும் கிறித்து பிறப்பதன் முன்னர் மகதநாட்டில் ஆட்சிபுரிந்த மௌரிய மன்னனாகிய அசோகனுடைய கல்வெட்டுக்களிலும் பாண்டியர்களைப் பற்றிய செய்தி கூறப்பெற்றுள்ளது. இலங்கையின் பழைய சரித்திரத்தை விளக்கும் ‘மகாவம்சம்' என்ற சரித நூல் அவ்விலங்கையின் முதற்றமிழ் வேந்தனும் புத்தரது நிர்வாண காலமாகிய கி.மு. 478 478 ல் அதனை ஆட்சிபுரியும் உரிமை அடைந்தவனுமாகிய விசயனென்பான், ஒரு பாண்டியர்குலப் பெண்மணியை மணந்தனனென்றும், ஆண்டு தோறும் தன் மாமனாகிய பாண்டியற்குச் சிறந்த பரிசில் அனுப்பின னென்றும் கூறுகின்றது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிரீஸ் தேயத்தினின்றும் சந்திரகுப்தன் அரசவைக்கு வந்த யவன தூதனாகிய மெகஸ்தனிஸ் என்பான் பாண்டி நாட்டின் வரலாற்றைப்பற்றிக் கூறுவது:

ம்

-

"ஹெர்க்கிளிசுக்குப் பண்டேயா என்ற ஒரு பெண் பிறந்தது. அவன் அப்பெண்ணிற்குத் தெற்கிற் கடலைச் சார்ந்துள்ள ஒரு நாட்டை அளித்தனன். அவளது ஆட்சிக்குட்பட்டவர்களை முந்நூற்றறுபத்தைந்து ஊர்களில் பகுத்துவைத்து ஒவ்வோர் ஊரினரும் ஒவ்வொரு நாளைக்கு அரசிக்குத் திரை கொணர வேண்டுமென்று கட்டளையிட்டான்" என்பது, இனி கி.பி.79 - ஆம் ஆண்டில் இறந்தவராகிய பிளைனி என்ற மற்றொரு மேனாட்டு வரலாற்று ஆசிரியரும் மெகஸ்தனிஸ் கூறியதைப் போன்றுள்ளதோர் கதை கூறியிருக்கின்றார். அஃது "இந்தியாவிற்