உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

CO

2. கடைச்சங்ககாலத்திற்கு முந்திய பாண்டியர்கள்

வடிவம்பலம்பநின்ற பாண்டியன்

இவன் நிலந்தரு திருவிற் பாண்டியனெனவும் பாண்டியன் மாகீர்த்தி யெனவும் வழங்கப் பெறுவன். தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பெரியாருள் ஒருவராகிய நச்சினார்க்கினியர் இவ் வேந்தன் இருபத்து நாலாயிரம் யாண்டு அரசு வீற்றிருந்தன னென்றும் இவனது பேரவையின்கண்ணேதான் தொல் காப்பியம் அரங்கேற்றப் பெற்றதென்றும் கூறியுள்ளார். ஆசிரியர் கூறியுள்ள ஆண்டின்தொகை புனைந்துரை யாயிருத்தல் வேண்டு மென்பதில் ஐயமில்லை. ஆயினும் இவன் முடிசூடி நெடுங்காலம் ஆட்சி புரிந்தோனாதல் வேண்டு மென்பது சங்கத்துச் சான்றோர் இவனை, 'நெடியோன்" என்று பல்லிடத்தும் குறித்துள்ளமையானே வெளியாகின்றது.

இவன், கடற்பிரளயத்தால் குமரிமுனைக்குத் தெற்கி லிருந்த குமரிநாடு முதலியன அழிதற்கு முன்னர் அக்குமரி நாட்டில் பஃறுளி என்றதோர் ஆற்றை வெட்டுவித்துக் கடற்றெய் வத்திற்கு விழவெடுத்தனன். இச்செய்தி புறநானூற்றிலுள்ள ஒன்பதாம் பாடலால் நன்கறியப்படுகின்றது. ஆகவே இவன் தலைச்சங்கத்தி னிறுதியில் வாழ்ந்தவனென்க.3

1.

தொல்காப்பியப் பாயிர உரை (நாச்சினார்க்கினியம்) பக்கம் 9.

2. (i) நிலந்தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடி யோனும்பல்' (மதுரைக் காஞ்சி வரி: 60-61).

3.

(ii) முன்னீர் விழவின் நெடியோன், நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. (புறம்-9). சின்னமனூர்ச் செப்பேடுகள் பாண்டியனொருவன் கடல் சுவற வேலெறிந்த கதையையும் ஒரு பாண்டியனிடத்துக் கடல் அடைக்கலம் புகுந்த கதையையும் குறிக்கின்றன. கடற் பிரளயத்தால் உலகங்களெல்லாமழிய, ஒரு பாண்டிய அரசன் மாத்திரம் உயிர்வாழ்ந்திருந்த செய்தி வேள்விக்குடிச் செப்பேடுகளில் வரையப் பெற்றுள்ளது. இம் மூன்று கதைகளும் வடிம்பலம்ப நின்ற பாண்டியனைப் பற்றியனவேயாமென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.