உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

பாண்டியன் முடத்திருமாறன்

குமரிநாடு கடல் கோளால் அழிந்தபின்னர், குமரி யாற்றிற்கும் தாம்பிரபருணியாற்றிற்கும் இடையிலுள்ள நிலப்பரப்பில் தங்கியிருந்த தமிழ்மக்களுக்குத் தலைநகராய் இருந்த கபாடபுரத்தில் வீற்றிருந்து அரசாண்ட பாண்டிய அரசர் ஐம்பத்தொன்பதின்மருள் இவ்வேந்தனே இறுதியில் வாழ்ந்தவன் ஆவான். ஆகவே, இவன் இடைச்சங்கத்தின் இறுதியில் இருந்தவன் ஆதல் வேண்டும். இவன் காலத்தில் நிகழ்ந்த ஒரு கடல் கோளால் பாண்டிய நாட்டின் பெரும்பகுதியும் அதன் தலை நகராகிய கபாடபுரமும் அழிந்தொழிந்தன. இக்கடல் கோளினால் எண்ணிறந்த தமிழ் நூல்கள் இறந்தன. இச்செய்தியை,

1

ஏரணம் உருவம் யோகம் இசைகணக் கிரதஞ் சாலந் தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம் மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள'

என்னும் பழைய பாடலும் உணர்த்துதல் காண்க. தமிழ்மக்கள் செய்த உயர்தவப்பயனால் எஞ்சிநின்ற நூல் தொல்காப்பியம் ஒன்றேயாகும். இக்கடல் கோளுக்குத் தப்பியுய்ந்த பாண்டியன் முடத்திருமாறனும் செந்தமிழ்ப் புலவர்களும் சிறிது வடக்கே சென்று மணலூர் என்னும் ஒரு சிறு நகரத்தில் தங்கினார்கள். இவர்கள் சிலகாலம் அந்நகரில் தங்கியிருந்து, பின்னர் மதுரை மாநகரை யடைந்தனர். இப்பாண்டியனும் அந்நகரை வளம்படுத்தித் தனக்குரிய தலைநகராகக் கொண்டு கடைச் சங்கத்தை அங்கு நிறுவினான். பல நல்லிசைப் புலவர்கள் தமிழ் ஆராய்ச்சி செய்யத் தொடங்கிப் பற்பல அரிய செந்தமிழ் நூல்கள் இயற்றுவராயினர். இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழும் உயர்நிலை எய்தின. எனவே, கடைச்சங்கத்தை மதுரைமாநகரின் கண் நிறுவி அதனைப் போற்றி வளர்த்துவந்த பாண்டியன் முடத்திருமாறன் நம் தமிழ்த்தாயின் பொருட்டு ஆற்றிய அரும்பணி அளவிட்டு உரைக்குந்தரத்ததன்று. ம்மன்னனே தண்டமிழ்ப் புலமையிற் சிறந்த ஒண்டிறற்

2

1. இறையனார் அகப்பொருளுரை-பக்கம் 5. 2. இறையனார் அகப்பொருளுரை-பக்கம் 5.