உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




11

பாண்டியர் வரலாறு குரிசில் ஆவன். வன் பாலைத்திணையையும் குறிஞ்சித் திணையையும் இன்சுவை பொருந்தப் பாடுவதில் வன்மை உடையவன். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய நற்றிணையில் இவன் பாடிய இரண்டு பாடல்கள் காணப்படுகின்றன (நற்றிணை 105; 228). இவன் மதுரைநகரை அமைத்ததையும் கடைச் சங்கத்தை அங்கே நிறுவியதையும் பராந்தக பாண்டியனுடைய செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.1 இவனைப் பற்றிய பிற செய்திகள் இக்காலத்திற் புலப்படவில்லை.

பாண்டியன் மதிவாணன்

இவன் கடைச்சங்கத்தைப் புரந்து வந்த பாண்டிய அரசர்களுள் ஒருவனாவன். சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் இவன் கடைச்சங்கம் இரீஇய பாண்டியருள் கவியரங்கேறியவன் என்று தம் உரைப்பாயிரத்திற் கூறியுள்ளார். ஆகவே இவன் செந்தமிழ்ப் புலமையிற் சிறந்து விளங்கிய வேந்தனாவன். இவன் ஒரு நாடகத் தமிழ் நூல் இயற்றியுள்ளான். அது மதிவாணர் நாடகத் தமிழ் நூல் எனப்படும். அந்நூல், நூற்பாவாலும் வெண்பாவாலும் இயற்றப்பெற்றது என்பர். அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரத் திற்கு உரையெழுது வதற்கு மேற்கோளாகக்கொண்ட’ ஐந்து இசைநாடக நூல்களுள் மதிவாணர் நாடகத் தமிழ்நூலும் ஒன்றாகும். அது முதனூலிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்தின் இலக்கணத்தை உணர்த்தும் சிறப்புடையது என்று சிலப்பதிகார உரையாளர் குறித்துள்ளார். இம்மன்னன் இயற்றிய அத்தகைய பெருமை வாய்ந்த நாடகத்தமிழ் நூல் இந்நாளிற் கிடைக்கப் பெறாதிருத்தல் பெரிதும் வருந்தத்தக்கதாகும். சிற்சில சூத்திரங்களே சிலப்பதிகார உரையிற் காணப்படுகின்றன. பொற்கைப்பாண்டியன்

இவன் கடைச்சங்க நாளில் விளங்கிய பாண்டியருள் ஒருவன். கண்ணகி முன் தோன்றிய மதுரைமாதெய்வம்

1.

2.

தென்மதுரா புரஞ்செய்தும் அங்கதனில் அருந்தமிழ் நற்சங்கம் இரீஇத் தமிழ் வளர்த்தும் இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல் என்பன.