உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

பாண்டியன் அறிவுடை நம்பி

வன் பாண்டியர் குடியில் தோன்றிய ஒரு மன்னன் ஆவன். இவன் இருவேறு நல்வினைகளின் பயன்களாயுள்ள அரிய கல்வியும் பெரிய செல்வமும் ஒருங்கே எய்தி அதற்கேற்றவாறு பேரறிவுடைய பெருங்கொடை வள்ளலாக வாழ்ந்தவன். கோப்பெருஞ்சோழற்கு உயிர்த் தோழரும் பாண்டிநாட்டினரும் பேரறிஞருமாகிய பிசிராந்தையார் இவ்வரசன் மீது பொருண்மொழிக் காஞ்சி பாடியிருத்தலின் இவன் அச்சோழன் காலத்தில் நிலவியவன் என்பது பெறப்படு கின்றது. (புறம்-184). இவன் பாடிய பாடல்களாக நற்றிணையில் ஒன்றும் குறுந்தொகையில் ஒன்றும் அகநானூற்றில் ஒன்றும் புறநானூற்றில் ஒன்றும் உள்ளன. (நற்றிணை -15; குறுந்தொகை -230; அகம் 28; புறம் - 188) எனவே, இவனது செந்தமிழ்ப் புலமை அறிஞர்கள் பெரிதும் மதித்துப் போற்றுற்குரியதாகும். இவன், மக்களாலுண்டாகும் இன்பம், இம்மையின்பம் எல்லா வற்றினும் சிறந்ததென்றும் அத்தகைய மக்கள் இல்லாதவர் கட்கு இம்மைப்பயன் ஒரு சிறிதும் இல்லை என்றும் கூறியிருக்கும் அரிய பாடல் எல்லோரும் படித்துணரத் தக்க தொன்றாகலின், அதனைப் பின்னே காண்க.

படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி

இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்

நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தும்

மயக்குறு மக்களை யில்லொர்க்குப்

பயக்குறை யில்லைத் தாம்வாழும் நாளே.'

(புறம்-188)

1. இதன் பொருள்: படைக்கப்படுஞ் செல்வம் பலவற்றையும் படைத்துப் பலருடனே கூடவுண்ணும் உடைமை மிக்க செல்வத்தை யுடையோராயினும் காலம் இடையே உண்டாகக் குறுகக்குறுகக் கடந்துசென்று சிறிய கையை நீட்டிக் கலத்தின்கட் கிடந்ததனைத் தரையிலேயிட்டும் கூடப்பிசைந்து தோண்டியும் வாயாற் கவ்வியும் கையால் துழாவியும் நெய்யை உடைய சோற்றை உடம்பின்கட் படச் சிதறியும் இங்ஙனம் அறிவை இன்பத்தான் மயக்கும் புதல்வரை இல்லாதார்க்குப் பயனாகிய முடிக்கப்படும் பொருளில்லை, தாம் உயிர் வாழும் நாளின்கண்- என்பது.