உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

15

இவன் நல்லிசைப் புலமைவாய்ந்த செல்வப் பாண்டியருள் ஒருவன். புறநானூற்றிலும் அகநானூற்றிலும் காணப்படும் இவனுடைய பாடல்களும், ஒல்லையூர் தந்த என்னும் அடைமொழிகளும் இவனுடைய புலமையையும் வீரத்தையும் நன்கு விளக்கும். இவன் பெரிய போர்வீரனென்பதும், கல்வியறிவு வாய்ந்த பட்டத்தரசியைச் சிறிதும் பிரிதலாற்றாப் பேரன்புடை யவனென்பதும், சிறந்த செங்கோல் வேந்தனென்பதும், வையை சூழ்ந்த வளம் மிக்க மையல் என்னும் ஊரில் வாழ்ந்த மாவன், எயில் என்னும் ஊரிலிருந்த ஆந்தை, புகழ்வாய்ந்த அந்துவஞ் சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் என்பவர்களைத் தன் உயிர் நண்பர்களாகக் கொண்டு ஒழுகியவனென்பதும், தனக்குரிய பாண்டி நாடாளும் அரசுரிமையை எவற்றினும் சிறந்ததாகக் கருதியிருந்தவ னென்பதும், 'மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத்து' (புறம் 71) என்று தொடங்கும் இவனது பாடலால் இனிது புலப்படு கின்றன.

இவனுடைய மனைவியாகிய பெருங்கோப்பெண்டு என்பாள் நல்லிசைப்புலமை வாய்ந்த மெல்லியல் நங்கை யாவள். அருங்கற்பு வாய்ந்த இவ்வம்மையின் பெருமையை உரைக்கவல்லார் யாவர்? செல்வமும் கல்வியும் ஒருங்கே அமையப்பெற்ற இவ்விருவரும் காதலனும் காதலியுமாக அன்புற்று ஆற்றிய இல்வாழ்க்கையே வாழ்க்கையாகும். அதுவே துறக்க வின்பமும் ஆகும். அறிவு வீற்றிருந்த செறிவுடை நெஞ்சினராகிய பூதப்பாண்டியனும் வனுடைய காதலியாகிய பெருங்கோப்பெண்டும் இனிது வாழ்ந்து வரும் நாட்களில் கொடுங்கூற்றம் பூதப்பாண்டியன் ஆருயிரைக் கவர்ந்து சென்றது. இந்நிலையிற் பெருங் கோப்பெண்டு எய்திய இன்னல் இத்தகைய தென்று இயம்பவும் இயலுமோ! தாய் தந்தை முதலானோரை இழந்தோர்க்கு அம்முறை சொல்லிப் பிறரைக் காட்டி அவர்களது துயரை ஆற்றலாம்; கணவனை இழந்தார்க்கு அங்ஙனம் காட்டுவது இல்லை யன்றோ? ஓவாத விதவையிடும்பை உயிருள்ளவரை ஒழிவதன்றே! இவற்றை