உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

நன்குணர்ந்துள்ள பெருந்தேவி ஆற்றொணாத் துன்பத்துள் ஆழ்ந்திருக்குங்கால் அரசனுடைய உரிமைச் சுற்றத்தினர் அவனது திருமேனியைப் பெருஞ் சிறப்புடன் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று ஈமத்து ஏற்றுவாராயினர். அதனைக் கண்ட பெருந்தேவி சிறிதும் ஆற்றாது அன்புடையாரைப் பிரிதலினும் அனலிற் புகுந்து ஆருயிர் துறத்தலே நலம் என்று துணிந்து தம் உயிர்க்காதலனோடு ஈமத்தீயிற் பாய்ந்து மாயக்கருதினாள். அச்சமயத்தில் அங்கிருந்த மதுரைப் பேராலவாயார் முதலான சான்றோர்கள் தம்மையொத்த பேரறிவுடைய வேந்தனை இழந்ததோடு அத்தகைய பேரறிவு வாய்ந்த அரசியையும் இழக்க மனம் பொறாதவர்களாய் அவ்வம்மையைத் தீப்புகாமல் விரைவில் தடை செய்வாராயினர்.

அது கண்ட அரசன் பெருந்தேவியும் தீயின் புறத்தே நின்றுகொண்டு அச்சான்றோரை நோக்கி, “பலசான்றவிரே! பலசான்றவிரே!'நின் தலைவனோடிறப்ப நீ போ' வென்று கூறாது அதனைத் தவிர்க்க என்று சொல்லி விலக்கும் பொல்லாத விசாரத்தையுடைய பலசான்றவிரே! அணிலினது வரிபோலும் வரியையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்திடப்பட்ட விதைபோன்ற நல்ல வெள்ளிய நறிய நெய் தீண்டாமல் இலையிடையே பயின்ற கையாற் பிழிந்து கொள்ளப்பட்ட நீர்ச் சோற்றுத் திரளுடனே வெள்ளிய எள்ளரைத்த விழுதுடனே புளிகூட்டி அடப்பட்ட வேளையிலை வெந்த வேவையுமாகிய ய வை உணவாகக் கொண்டு பருக்கைகளாற் படுக்கப்பட்ட படுக்கையின்கண் பாயுமின்றிக் கிடக்கும் கைம்மை நோன்பால் வருந்தும் பெண்டிருள்ளேம் அல்லேம் யாம்; புறங்காட்டின்கண் உண்டாக்கப்பட்ட கரிய முருட்டால் அடுக்கப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்கு அரிவதாகுக; எமக்கு எம்முடைய பெரிய தோளையுடைய னாகிய கொழுநன் இறந்து பட்டானாக, முகையில்லையாக வளவிய இதழ் மலர்ந்த தாமரையையுடைய நீர்செறிந்த பெரிய பொய்கையும் தீயும் ஒரு தன்மைத்து' என்னும் பொருள் கொண்ட ‘பல்சான்றீரே பல்சான்றீரே” என்று தொடங்கும்

1. புறம்-246.