உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

17

பாடலைக் கூறித் தீயிற் பாய்ந்து உயிர் துறந்தனள். இதனால் இவ்வம்மை தன் பெருங்கற்பினால் நிகழ்த்திய அருஞ்செயல் வெளியாதல் காண்க.

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச் சங்கநாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டியர்களுள் ஒருவனாவன். இவன் ஆட்சிக் காலத்திலேதான் காவிரிப் பூம்பட்டினத்து வணிகர்களுள் ஒருவனாகிய கோவலன் தன் மனைவியாகிய கண்ணகியுடன் வாணிகஞ் செய்யக் கருதி மதுரைக்குச் சென்றனன். அவன் அங்கு ஆயர் பாடியிலுள்ள இடைச்சியர் தலைவியாகிய மாதரியின் இல்லத்தில் தன் மனைவியை இருத்தி, அவளது சிலம்பொன்றை வாங்கிக் கொண்டு, அதனை விற்பதற்கு அகநகர்க்குட் சென்றபோது எதிரில் வந்த அரசாங்கப் பொற்கொல்லனது சூழ்ச்சியினால் கோப்பெருந்தேவியின் சிலம்பு கவர்ந்த கள்வனென்று

ப்பாண்டியனால் கருதப்பட்டுக் காவலாளனால் வெட்டி வீழ்த்தப்பட்டான். இத்துன்பச் செய்தியை யுணர்ந்த கண்ணகி, தன் நாயகனை ஆராயாமல் அநீதியாகக் கொல்வித்த இவ்வரசன் பாற் சென்று தன் வழக்கை எடுத்துரைத்துத் தன் நாயகனாகிய கோவலன், கோப்பெருந்தேவியின் சிலம்பு கவர்ந்த கள்வனல்லன் என்று மெய்ப்பித்தாள். உண்மையை யுணர்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன், தான் ஒரு கற்புடைமகளின் கணவனை ஆராயாது கொல்வித்தமைக்குப் பெரிதும் கவன்று, அத்தீச் செயலை உன்னியுன்னி நெஞ்சம் நடுக்குற்றுத் தாழ்ந்த குடையனாய்த் தளர்ந்த செங்கோலனாய்ப்,

பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட

யானோ அரசன்? யானே கள்வன்! மன்பதை காக்கும் தென்புலங் காவல்

என்முதற் பிழைத்தது; என் ஆயுள் கெடுக'

என்றுரைத்து அரசுகட்டிலில் மயங்கி வீழ்ந்து உயிர் துறந்தனன். தன் கணவன் இறந்த செய்தியையறிந்த கோப்பெருந்தேவியும் அத்துன்பத்தை ஆற்றாது சிறிது நேரத்திற்குள் உயிர் நீத்தனள்.