உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 தான் அறியாது புரிந்த ஒரு பிழைக்காகத் தன் ஆருயிரையே இவ்வரசன் போக்கிக் கொண்டனனெனில், இவனது ஆட்சிக் காலத்திற் குடிமக்கள் எல்லோரும் எத்தகைய இன்னல்களும் எய்தாது இன்புற்று வாழ்ந்திருத்தல் வேண்டு மென்று கூறுவது சிறிதும் புனைந்துரையாகாது.

இப்பாண்டியனுக்கு நேர்ந்த தீவினைத் திறங்களைக் கேட்ட சேர மன்னனாகிய செங்குட்டுவன் பெரிதும் வருந்தித் தன்பால் வந்திருந்த சங்கப் புலவராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரை நோக்கி, 'புலவீர்! அவன் செங்கோலினின்று தவறிய செய்தி என்னை யொத்த அரசர்க்கு எட்டு முன்னர் உயிர் துறந்தமை, தீவினையால் வளைக்கப்பட்ட கோலை உடனே செங்கோலாக்கியது; அரசராயுள்ளார்க்குத் தம் நாட்டிற் காலத்தில் மழை பெய்யாதாயின் அச்சம்; உயிர்கள் தவறிழைக்கு மாயின் அச்சம்; கொடுங்கோற்கஞ்சிக் குடிகளைப் பாதுகாத்தற் குரிய அரசர் குலத்திற் பிறத்தல் துன்பமல்லது தொழுதக வில்லை' என்று மிகவும் இரங்கிக் கூறிய அரிய மொழிகள் ஈண்டு அறிந்துகோடற்கு உரியனவாகும்.

அன்றியும், மதுரைமாநகரம் தீப்பற்றியெரிந்த ஞான்று, கண்ணகி முன்னர்த்தோன்றிய மதுரைமாதெய்வம் நெடுஞ் செழியனது செங்கோற் சிறப்பையும் கோவலனது ஊழ்வினை உருத்துவந்து தன் பயனை நுகர்வித்ததென்னும் உண்மை யினையும் விளக்கிக் கூறிய வரலாற்றைச் சிலப்பதிகாரத்திலுள்ள கட்டுரை காதையிற் பரக்கக் காணலாம். இதனாலும் இவனது செங்கோலினது மாண்பு ஒருவாறு இனிது புலனாகும்.

இனி, இவனது செங்கோற்பெருமையோடு ஒருங்குவைத்துப் புகழ்தற்குரியனவாய் அடுத்து நிற்பன இவனுடைய வீரமும் செந்தமிழ்ப் புலமையுமாகும். இவன் வடநாட்டிலிருந்த ஆரிய மன்னர்களைப் போரிற் புறங்கண்டு புகழெய்தியவன் என்பது,

வடவாரியர் படைகடந்து

தென்றமிழ்நா டொருங்கு காண புரைதீர்கற்பிற் றேவிதன்னுடன் அரசுகட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்'