உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

வன் முடிசூடிக்கொண்ட பின்னர் நன்மாறன் என்ற வேறு பயருடை யவனாய்த் திகழ்ந்தனன் என்று தெரிகின்றது. இவனது ஆட்சிக்காலத்திற் பாண்டி நாடு மழைவளமிழந்து வறுமை யுற்றிருந்தது. அவ்வறுமை நீங்கிக் குடிகள் இன்புற்று வாழுமாறு இவ்வேந்தன் கண்ணகியின் பொருட்டுப் பெருவிழா ஒன்று நடத்தினன். இதனாற் கண்ணகியின் சினம் தணியவே, நாடு நன்னிலையை எய்திற்று; குடிகளும் இனிது வாழ்ந்தனர். புறநானூற்றில் இவனைப் பாடியுள்ள புலவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் என்பவரே யாவர். அப் பாடலால் (புறம் - 59) இவனுடைய அருங்குணங்கள் பலவும் வெளியாகின்றன. இவன் சித்திரமாடத்து இறந்தனன் போலும். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

இவன் கடைச்சங்கநாளில் விளங்கிய பாண்டியர்களுள் ஒருவன். இவன் சித்திரமாடத்துத்துஞ்சிய நன்மாறனுடைய புதல்வன் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவன் தந்தை சின்னாட்களே அரசுசெலுத்தியமையின் இவன் இளமையிலேயே அரசு கட்டிலேறல் இன்றியமையாததாயிற்று. இவன் ஆட்சி புரிந்துவரும் நாட்களில், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறையும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்னும் வேளிர் ஐவரும் இந்நெடுஞ்செழியனை இளைஞன் என்று இகழ்ந்து கூறிப் பாண்டி நாட்டைக் கைப்பற்றக்கருதி மதுரைமாநகரை முற்றுகை யிட்டார்கள். இதனை யுணர்ந்த நெடுஞ்செழியன், பெருஞ்சினங்

கொண்டு, 'புல்லிய வார்த்தைகளைக் கூறிய சினம்பொருந்திய அரசரைப் பொறுத்தற்கரிய போரின்கண்ணே சிதறப்பொருது, முரசத்தோடு கூட அவரைக் கைக்கொண்டிலேனாயின், பொருந்திய எனது குடைநிழற்கண் வாழ்வோராகிய குடிமக்கள், தாங்கள் சென்றடையும் நிழற் காணாதே கொடியன் எம்முடைய வேந்தன் என்று கருதிக் கண்ணீரைப் பரப்பிப் பழிதூற்றும் கொடுங்கோலை உடையேனாகுக; உயர்ந்த தலைமையுடனே மேம்பட்ட கேள்வியையுடைய மாங்குடி மருதன் முதல்வனாக