உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

21

உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழுந் தலைமையையுடைய புலவர் பாடாது நீங்குக எனது நிலவெல்லையை; என்னாற் புரக்கப்படுங்கேளிர் துயரம்மிக இரக்குமவர்கட்குக் கொடாத வறுமையை யானுற' என்று வஞ்சினங்கூறிப் போருக்கெழுந்து உ ழிஞைசூடிப் போர் புரியத் தொடங்கினன். இவன் மிக்க இளைஞனாயினும் சிறிதும் அஞ்சாமற் கடும்போர் புரிந்து அன்னவர் எழுவரும் புறங்காட்டி ஓடச் செய்தனன். தோல்வியுற்ற எழுவரும் ஓடிச்சென்று சோழ நாட்டிற்புகும் போது நெடுஞ்செழியன் அவர்களை விடாது பின் தொடர்ந்து சென்று தலையாலங்கானத்து மறித்துப் பெரும்போர் நடத்தி வாகைமிலைந்தனன். (புறம்-19,23) இவன், இதனோடு நில்லாமற் பகைஞர்களை அவர்களுடைய உறையூர், வஞ்சி முதலான நகரங்கள் வரையிற் போர்ப்பறை யொலிப்பத் துரத்திச்சென்று அன்னோரின் உரிமை மகளிர் நாணமுற்று உயிர்துறக்குமாறு அவர்களைக் கொன்றனன். (புறம்-78) வேள்எவ்வி முன்னர் ஆட்சி புரிந்ததும் இருங்கோவேண்மானுக் குரியது மாகிய மிழலைக் கூற்றத்தையும் அதற்கடுத்துள்ளதும் வேளிர்களுக் குரியதுமாகிய முத்தூர்க் கூற்றத்தையும் இப்போரின் இறுதியிற் கைப்பற்றிப் பாண்டிநாட்டோடு சேர்த்துக்கொண்டான். (புறம். 24). இப்போர் நிகழுங்கால், இவன் மிகவும் இளைஞனாயி ருந்தனன் என்பது, 'சதங்கை வாங்கப்பட்ட காலிலே ஒள்ளிய வீரக் கழலினைச் செறித் துக் குடுமியொழிக்கப்பட்ட சென்னிக் கண்ணே வேம்பினது ஒள்ளிய தளிரை நெடிய கொடியாகிய உழிஞைக் கொடியோடு சூடிக் குறிய வளைகளை யொழிக்கப் பட்ட கையின்கண்ணே வில்லைப் பிடித்து நெடிய தேரினது மொட்டுப் பொலிவு பெற நின்றவன் யாரோதான்? யாரேயா யினும் அவன் கண்ணி வாழ்வதாக; தாரையணிந்து ஐம்படைத் தாலி கழித்ததுமிலன்; பாலை ஒழித்து உணவும் இன்றுண்டான்; முறை முறையாக வெகுண்டு மேல்வந்த புதிய வீரரை மதித்ததும், அவமதித்ததும் இலன்; அவரையிறுகப் பிடித்துப் பரந்த ஆகாயத்தின்கண்ணே

1.

இவை புதுக்கோட்டை நாட்டிலும் தஞ்சாவூர் ஜில்லா அறந்தாங்கித் தாலுகாவிலும் இராமநாதபுரம் ஜில்லா திருவாடானைத் தாலுகாவிலும் முற்காலத்திருந்த கூற்றங்களாகும்.

1