உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 ஒலியெழக் கவிழ்ந்து உடலம் நிலத்தின் கண்ணே பொருந்தக் கொன்றதற்கு மகிழ்ந்ததுவும், இவ்வாறு செய்தே மென்று தன்னை மிகுத்ததுவும் அதனினும் இலன்' என்னும் பொருள் காண்ட 'கிண்கிணி களைந்தகால்' என்று தொடங்கும் இடைக்குன்றூர் கிழாரது பாடலால் தெளிவாகப் புலப்படு கின்றது.(புறம்-77)

இவ்வேந்தன், இரவிற் பாசறையின்கண் போரிற் புண்பட்ட வீரர்களைப் படைத்தலைவன் முன்னே காட்டிச் செல்லத் துயில் சிறிதுமின்றித் தானே அவர்களை நேரிற்கண்டு அன்புடன் இன்சொற் கூறிப் பாராட்டுவது வழக்கம் என்பது, 'வேப்பந் தாரைத் தலையிலே கட்டின வலிய காம்பினையுடைய வேலோடே முன்செல்கின்ற சேனாதிபதி புண்பட்ட வீரரை அடைவே அடைவே காட்ட செருக்கின குதிரைகள் கரிய சேற்றையுடைய தெருவிலே தம் மேலே வீசுந் துளிகளை யுதற, இடத்தோளினின்றும் நழுவி வீழ்ந்த அழகினையுடைய ஒலியலை இடப்பக்கத்தே யணைத்துக் கொண்டு, வாளைத் தோளிலே கோத்த தறுகண்மையுடைய வாளெடுப்பான் தோளிலே வைத்த வலக்கையை யுடையவனாய்ப் புண்பட்ட வீரர்க்கு அகமலர்ச்சி தோன்ற முகம் பொருந்தி, நூலாலே சட்டத்தைக் கட்டின முத்தமாலையையுடைய கொற்றக்குடை தவ்வென்னும் ஓசைப்பட்டு அசைந்து பரக்கின்ற துளியைக் காக்க நள்ளென்னும் ஓசையையுடைய நடுயாமத்தும் பள்ளி கொள்ளானாய்ச் சில வீரரோடு புண்பட்டோரைப் பரிகரித்துத் திரிதலைச் செய்யும் அரசன்' என்று பொருள்படும் 'வேம்புதலை யாத்த நோன்கா ழெஃக மொடு' என்னும் நெடுநல்வாடைப் பாடற்பகுதியால் நன்கறியக் கிடக்கின்றது.

இங்ஙனம் பெருவீரனாகிய இந்நெடுஞ்செழியன் தான் ஒருவனாக நின்று பேரரசர் இருவரையும் தலையாலங்கானத்துப் போரில் வென்ற செய்தி மூன்றாம் இராசசிங்க பாண்டியனது சின்னமனூர்ச் செப்பேட்டிலும்' குறிக்கப்பெற்றுள்ளது.

1. தலையாலங் கானத்திற் றன்னொக்கு மிருவேந்தரைக் கொலைவாளிற்றலை துமித்துக் குறைத்தலையின் கூத்தொழித்தும்