உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

23

இச்செய்தியைப் பராந்தக பாண்டியனின் செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன.'

இனி, 'நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்' என்ற 72-ஆம் புறப்பாட்டினால், இம்மன்னன் கற்றுத்துறைபோய காவலன் என்பதும், கற்றோர்பாற் பேரன்பும் பெருமதிப்பும் உடையவன் என்பதும் நன்கு விளங்குகின்றன. இவன் புலவர் பெரு மக்களிடத்து எத்தகைய மதிப்பு வைத்திருந்தனன் என்பது, ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவ னாக

உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்

புலவர் பாடாது வரைகவென் நிலவரை

என்னும் புறப்பாட்டடிகளில் இவன் கூறியுள்ள உயர் மொழிகளால் ஒருவாறு புலப்படும்.

பத்துப்பாட்டிலுள்ள மதுரைக் காஞ்சியும் நெடுநல் வாடையும் இவ்வேந்தன் மீது பாடப்பட்ட நூல்களே யாகும். இவ்வரிய நூல்களைப் பாடிய புலவர் பெருமக்கள் முறையே மாங்குடி மருதனாரும் மதுரைக் கணக்காயனார் நக்கீரனாருமே யாவர்.

மகனார்

நெடுஞ்செழியன் போர்விருப்பு மிக்குடையவனாய்,

'ஒளிறிலைய வெஃகேந்தி

அரசுபட வமருழக்கி

முடித்தலை யடுப்பாகப்

புனற்குருதி யுலைக்கொளீஇத்

தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின்

அடுகளம் வேட்டு'

வாணாட்களைக்

கழித்து வந்தமையின்,

இவன்

அவைக்களப் புலவர் தலைவராகிய மாங்குடிமருதனாரென்பார் வீடடைதற் கேதுவான அறநெறியைக் கடைப்பிடித் தொழுகுமாறு இவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தல் கருதியே மதுரைக் காஞ்சி என்றதோர் அரிய நுலை இயற்றியுள்ளார். இந்நூலால்

1. ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும்