உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

இவனுடைய முன்னோரது பெருமையும் இவனுடைய செங்கோற் சிறப்பும் வீரமும் பாண்டிய நாட்டின் வளமும் மதுரைமாநகரின் வனப்பும் பிறவும் இனிதுணரப்படும். இஃது எழுநூற்றெண் பத்திரண்டு அடிகளையுடையது.

தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற் றொன்முது கடவுட் பின்னர் மேய

வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந'

என்னும் மதுரைக் காஞ்சியடிகளிற் பாண்டியராக மதுரையில் வீற்றிருந்து அரசாண்ட சோமசுந்தரக் கடவுளின் வழியில் தோன்றியவன் இந்நெடுஞ்செழியன் என்று மாங்குடிமருதனார் குறித்திருப்பது ஈண்டு அறியத் தக்கது.

பாண்டியன் கானப்பேர் கடந்த உக்கிரப் பெருவழுதி

கடைச்சங்கத்தைப் புரந்துவந்த பாண்டிய மன்னர்களுள் இவனே இறுதியில் இருந்தவன். இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் புதல்வன் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இவன் தன் பகைஞனாகிய வேங்கை மார்பனைப் போரில் வென்று அவனுக்குரிய கானப் பேரெயில் (காளையார் கோயில்) என்னும் ஊரைக் கைப்பற்றி யவனாதலின் கானப்பே ரெயில்கடந்த உக்கிரப் பெருவழுதி என்று வழங்கப்பட்டனன். (புறம்-21) மாரிவெண்கோ என்னும் சேரமன்னனும் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற சோழ மன்னனும் இவனுக்குச் சிறந்த நண்பர்களாக இருந்தனர். (புறம் 367) இவன் சங்கப்புலவர்களோடு ஒப்பப்பாடும் - ஆற்றலுடைய பெரும் புலவனாக விளங்கியமை ஈண்டு உணரத் தக்கது. மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மரைக் கொண்டு அகநானூறு தொகுப்பித்தோன் இவ்வேந்தனேயாவன். இவன் தலைமையிலேதான் கடைச் சங்கத்தில் திருக்குறள் அரங்கேற்றப் பெற்றது என்று ஒரு கதை வழங்குகிறது; இஃது உண்மையன்று என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. குறிஞ்சியையும் மருதத்தையும் புனைந்து பாடுவதில் வன்மையுடையவன். இவன் பாடியனவாக நற்றிணையில் ஒரு பாடலும் அகநானூற்றில் ஒரு பாடலும் உள்ளன. (நற்றிணை- 98; அகநானூறு-26) இவன் காலத்திற்குப் பின்னர், கடைச்

வன்