உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

25

சங்கம் நடைபெறாமல் அழிவுற்றது என்பது களவியலுரையால் உணரப்படுகின்றது. ஆனால், அச்சங்கம் அழிந்தமைக்குச் சொல்லப்படுங் காரணங்கள் உண்மை என்று தோன்றவில்லை. இவனுக்குப் பிறகு, பாண்டி நாட்டில் அக்காலத்தில் ஆட்சி புரிந்த மன்னன் யாவனென்பது இப்போது புலப்படவில்லை.

னி, இவ்வேந்தர்களேயன்றிக் கடைச்சங்க நாளில் வேறு சில பாண்டிய மன்னர்களும் இருந்தனர் என்பது சங்கத்துச் சான்றோர் அருளிய எட்டுத்தொகை நூல்களால் அறியப் படுகின்றது. அன்னோர் கருங்கையொள்வாட் பெரும் பெயர்வழுதி, பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி, நல்வழுதி, கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி, இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி,நம்பி நெடுஞ்செழியன், குறுவழுதி என்போர். அவர்களைப் பற்றிய வரலாறுகள் நன்கு புலப்படாமையின், சிற்சில குறிப்புக்களே ஈண்டு எழுதப்படுகின்றன.

கருங்கையொள் வாட் பெயர்வழுதி

இவன் சோழன் கரிகாற் பெருவளத்தான் காலத்தில் இருந்தவன். அவ்வளவனுடைய மாமன் இரும்பிடர்த்தலையார் என்ற புலவராற் பாடப்பெற்றவன்; மிக்க வீரமும் கொடையும் உடையவன். (புறம் -3)

பன்னாடுதந்த பாண்டியன் மாறன்வழுதி

இவன் சிறந்த செந்தமிழ்ப் புலவன்; (குறுந்தொகை-270) எட்டுத்தொகையுள் ஒன்றாகிய நற்றிணையைத் தொகுப்பித் தோன் இம்மன்னனே யாவன். (நற்றிணை இறுதிக் கட்டுரை) நல்வழுதி

இவன் வையையாற்றைச் சிறப்பிக்கும் பன்னிரண்டாம் பரிபாடலை இயற்றியவன். இப்பாடலிற் கூறப்பெற்றுள்ள புதுநீர் விழாவும் வையையின் சிறப்பும் படித்தின் புறத்தக்கன. கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி

வன் வடபுல மன்னர்களைப் போரிற் புறங்கண்டு வெற்றிப் புகழை எங்கும் பரப்பிய பெருவீரன். (புறம்-51,52)