உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்

இவன் வண்மையும் வீரமும் உடையவன் என்பது புலவர் தலைவராகிய நக்கீரனார் பாடிய 56-ஆம் புறப்பாட்டினால் நன்கு விளங்குகின்றது. இப்பாட்டினாற் கடைச்சங்க காலத்தில் மேனாட்டு யவனர்கள் நம் தமிழகத்தில் மது வகைகளைக் கொணர்ந்து விற்று வந்தனர் என்பது இனிதுணரப்படுகின்றது. குறுவழுதி

இவன் அகநானூற்றிலுள்ள 150-ஆம் பாடலை இயற்றிய வேந்தனாவன்.

வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி

இவன் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் புலவராற் புகழ்ந்து பாடப்பெற்றவன்; (புறம்-58) சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனுக்குச் சிறந்த நட்பினன்.

நம்பி நெடுஞ்செழியன்

இவன் அரசர்கட்குரிய எல்லா இன்பங்களையும் துய்த்து, வண்மை வீரம் நடு நிலைமை முதலான அருங்குணங் களெல்லாம் ஒருங்கேயமையப்பெற்றுப் பெருமையோடும் புகழோடும் வாழ்ந்தவன். இவன் இறந்தஞான்று பேரெயின் முறுவலார் என்னும் புலவர் பாடியுள்ள கையறுநிலை எத்தகையோருடைய மனத்தையும் உருகச்செய்யும் இயல்பு வாய்ந்ததாகும்.(புறம்-239)

இனி, கடைச்சங்கம் இரீஇய ய பாண்டிய மன்னர் நாற்பத்தொன்பதின்மருள் கவியரங்கேறினார் மூவர் என்று இறையனாரகப் பொருளுரை உணர்த்துகின்றது. சங்க நூல்களை ஆராய்ந்து பார்க்குங்கால், தண்டமிழ்ப் புலமை சான்ற ஒண்டிறற் பாண்டிய மன்னர்கள் பன்னிருவர், கடைச் சங்கநாளில் இருந்து பாடியுள்ளனர் என்பது நன்கு புலப்படு கின்றது. இப் பன்னிருவரும் இயற்றியுள்ள சிறந்த செந்தமிழ்ப் பாக்கள் நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு ஆகிய ஐந்து தொகை நூல்களிலும் காணப்படு