உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

27

கின்றன. எனவே சங்கப்புலவர்களோடு ஒப்பப் பாடும் புலமையும் பெருமையும் வாய்ந்துள்ள இப்பன்னிரு பாண்டி மன்னர்களும் கவியரங் கேறியவர்களாதல் வேண்டுமன்றோ? அங்ஙனமாயின், கடைச்சங்கம் இரீஇய பாண்டியர்களுள் கவியரங்கேறினார் மூவர் என்று இறையனாரகப் பொருளுரை உரைப்பது சிறிதும் பொருந்தவில்லை.

இனி, இம்மன்னர்களின் ஆட்சிக் காலங்களை வரையறுத் துரைப்பதும் எவனுக்குப்பின் எவன் பட்டத்திற்கு வந்தனன் என்பதையும், ஒருவனுக்கு மற்றொருவன் என்ன முறையினன் என்பதையும் சங்க நூல்களைக் கொண்டு ஆராய்ந்து கூறுவதும் இயலாதவையாயுள்ளன. நுணுகி யறிந்தவற்றை ஆங்காங்குக் குறித்துள்ளோம். கடைச்சங்ககாலத்தின் பிற்பகுதியில் ஆட்சிபுரிந்த பாண்டிய அரசர்களைச் சில ஆராய்ச்சியாளர் அடியில் வருமாறு முறைப்படுத்தி எழுதியுள்ளனர்.

1. ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன். 2. வெற்றிவேற்செழியன் என்ற சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்.

3. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.

4. கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி.